For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலசேகரப்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்: குவியும் பக்தர்கள்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று இரவு நடக்கிறது. இதனால் பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாடப்படும் குலசேகரப்பட்டினம் தசரா விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அம்மன் வீதியுலா போன்றவை நடந்து வருகிறது.

Soorasamharam in Kulasekarapatnam t

தசரா திருவிழாவையொட்டி விரதம் இருந்து காளி, அனுமன், கரடி, குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் போட்டு பக்தர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலித்து வருகின்றனர். முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நள்ளிரவு நடக்கிறது. இதனை காண நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கார், லாரி, வேன்களில் வந்து குவிந்துள்ளனர். வெளியிடங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூரசம்ஹாரத்தை காண நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இன்று காலை முதலே குவியத் தொடங்கியுள்ளனர். பல்வேறு வேடங்கள் அணிந்தவர்களும் திறந்தவெளி வேன்கள் மூலம் குவியத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. இது 8 மணி வரை நடைபெறும்.

பின்பு காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

English summary
Soorasamharam will be held in Kulasekarapatnam tonight. Devotees throng the town to witness the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X