For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏரிகள் அடுத்தடுத்து உடைப்பு... வெள்ளத்தில் மூழ்கி தீவாகிப் போன தென்சென்னை!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வேளச்சேரி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், ஏரிகள் உடைந்ததால் தென்சென்னை பகுதிகள் துண்டிக்கப்பட்டு தீவாக தத்தளிக்கிறது.

வரலாறு காணாத வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்ததால் வழக்கமான மழை வெள்ளமே 10 அடி உயரத்துக்கு தாழ்வான தென்சென்னை பகுதியில் தேங்கி நிற்கிறது. அத்துடன் ஏரிகளும் நிரம்பி உடைந்து அந்த நீரும் சூழ்ந்து கொண்டதால் தென்சென்னையின் பெரும்பகுதி மூழ்கிப் போயுள்ளன.

South Chennai lakes breached

வேளச்சேரி பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி, செம்மஞ்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரிகள் நிரம்பின. இதன் ஏரிக்கரைகள் அடைந்து அந்த நீரும் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் சோழிங்கநல்லூர்- மேடவாக்கம்- தாம்பரம் சாலை; பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மகாபலிபுரம்- தாம்பரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை- தாம்பரம் இணைப்பு சாலை அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

தென்சென்னையின் பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி சாலைகளிலும் தண்ணீர் பெருமளவு தேங்கியுள்ளதால் தென்சென்னை பகுதி தனித் தீவாக மாறிப் போயுள்ளது.

English summary
After several waterbodies breached their banks water seeped into hundreds of houses in south chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X