For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்மேற்குப் பருவமழை கைகொடுக்கவில்லை 28% குறைவு - வானிலை மையம்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 28 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாக சென்னை வானியை ஆய்வு மையம் கூறியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை எதிர்ப்பார்த்ததை விட குறைந்த அளவே பெய்துள்ளது வானிலை மைய புள்ளி விவரங்கள் வெளிக்காட்டியுள்ளன. கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 29வரை சராசரியாக 8 செ.மீ அளவே பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் முதல் ஜூலை மாத வரையிலான காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலமாகக் கருதப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை கேரள மாநிலத்திற்கே அதிக பயன் அளிக்கும், இதனால் தமிழகத்திற்கு அதிக பயன் இருக்காது.

South west monsoon not fruitful to Tamil Nadu

தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ளது. எனினும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்மாநிலங்கள் தென்மேற்குப் பருவமழையால் பயனடைகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எந்த அளவிற்கு பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூன் 1 முதல் ஜூலை 29ம் தேதி வரை தென்மேற்குப் பருவமழை 8 செ.மீ மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 26 சதவீதம் குறைவு.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடக்கு மற்றும் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

English summary
Southwest monsoon this year also records low as of 26 Percentage in Tamilnadu, Chennai Metrological department Director Balachandran says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X