For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

48 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டிருப்பதாகவும், அது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நிலக் கொண்டிருப்பதாகவும், அது அடுத்த 48
மணி நேரத்தில் புயலாக மாறுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதிக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் 48 மணி நேரத்தில் அது புயலாக மாறுகிற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Southeastern part of the Bay of Bengal; Overlay cycle in the Arabian Sea

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது.

எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைப் பொழிவே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டி உள்ள பகுதியில் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான 'நடா' புயல் கடலூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் 'நடா' புயல் கடந்த 2-ந் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. அங்கு ராட்சத அலைகள் எழுகின்றன. இதனால் அந்தப் பகுதி மக்கள் எச்சிரிக்கையுடன் இருக்குமாறும், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

800 சுற்றுலாப் பயணிகளை மீட்க கடற்படை நடவடிக்கை:

இந்த சூழலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒன்றான ஹேவ்லாக்கில் சிக்கியுள்ள 800 சுற்றுலாப் பயணிகளை மீட்டு வர இந்திய கடற்படைக்குச் சொந்தமான 4 கப்பல்கள் விரைந்துள்ளன.

ஹேவ்லாக் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், அந்தமான், நிக்கோபார் தீவுகளின் பேரிடர் மீட்புக் குழுவினர், சுற்றுலாப் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி இந்திய கடற்படைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

போர்ட்பிளேருக்கு 310 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
southeastern part of the Bay of Bengal; Overlay cycle in the Arabian Sea and 1st-number-cage-ascent Storm warning in port of Cuddalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X