For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஈஷா தியான லிங்க இலச்சினை நீக்கம்.. தெற்கு ரயில்வே நடவடிக்கை

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் பலகையில் இருந்து ஈஷா தியான லிங்க இலச்சினை நீக்கபட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கோவை: சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் பலகையில் இருந்து ஈஷா தியான லிங்க இலச்சினை நீக்கபட்டுள்ளது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை தினசரி சேரன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த ரயில் பெட்டிகளில், கோவையின் அடையாளமாக, ஈஷாவின் தியான லிங்க படம் ஒட்டப்பட்டது.

Southeran railway changed Cheran express's Esha logo

தென்னக ரயில்வேயின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து கோவையில் நிறைய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஈஷாவின் தியான லிங்கம்தான் கோவையின் அடையாளமா என கேட்டு அனைவரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்த்னர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தெற்கு ரயில்வே அந்த இலச்சினையை நீக்கி இருக்கிறது.

ஈஷா தியான லிங்க இலச்சினைக்கு பதிலாக ரயிலின் பெயர்ப்பலகையில் 'கோவை ரயில் சந்திப்பு' இலச்சினையை பொறித்து இருக்கிறது.

English summary
Southeran railway has changed Cheran express's Esha logo. Covai Rail Junction photo has updated as the new logo after controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X