For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை எதிரொலி: டெல்லி, திருப்பதி உட்பட, சென்னை வழித்தடத்தில் இயங்கும் 9 ரயில்கள் ரத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கனமழை காரணமாக, தெற்கு ரயில்வே மொத்தம் 9 ரயில்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இன்று மாலை 5.20 மணிக்கு புறப்பட வேண்டிய, (ரயில் எண்: 17643) சென்னை எழும்பூர்-காக்கிநாடா நடுவேயான போர்ட் சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய, சென்னை சென்ட்ரல்-சப்ரா நடுவேயான கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12669), மாலை 4.25 மணிக்கு புறப்பட வேண்டிய, சென்னை சென்ட்ரல்-பூரி நடுவேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22860) ரத்து செய்யப்பட்டுள்ளன.

Southern Railway has cancelled three trains

மேலும், இன்று இரவு 11.45 மணிக்கு சென்டிரலில் இருந்து கிளம்பவிருந்த ஹவுரா மெயில் (எண்-12840), இரவு 10.30 மணிக்கு எழும்பூரில் இருந்து குவகாத்திக்கு கிளம்பவிருந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-15629), சென்டிரலில் இருந்து திருப்பதிக்கு இன்று பகல் 2.15 மணிக்கு கிளம்பியிருக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் (எண்-16053), திருப்பதியில் இருந்து புறப்பட்டு இன்று இரவு 9.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேர வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் (எண்-16058) ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்டிரலில் இருந்து இன்று இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்-12852) மற்றும் இன்று இரவு 10 மணிக்கு, சென்டிரலில் இருந்து, டெல்லி புறப்பட வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (எண்-12621) ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

English summary
Southern Railway has cancelled three trains due to heavy rain on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X