For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோடை விடுமுறை கூட்டத்தை சமாளிக்க, பெங்களூரு-கோவைக்கு சிறப்பு ரயில்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: பெங்களூரு யஷ்வந்தபூர் ரயில் நிலையம் மற்றும் கோவையிடையே வாரமிருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோடை விடுமுறைக்கால கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே, கோயம்புத்தூர் யஸ்வந்த்பூர் இடையே 10.04.2015 முதல் 30.04.2015 வரை வாரமிருமுறை சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.

Southern Railway is operating 2 Bi-weekly special trains between Coimbatore and Yesvantpur

ரயில் எண், 06544 கோயம்புத்தூர் யஷ்வந்த்பூர் வாரமிருமுறை ரயில் கோயம்புத்தூரில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், ரயில் எண். 06543 யஸ்வந்த்பூர் கோயம்புத்தூர் வாரமிருமுறை ரயில் யஷ்வந்த்பூரில் இருந்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், இயக்கப்படும்.

இந்த ரயிலில் 2 ஏசி இரண்டடுக்கு ரயில் பெட்டிகளும், 3 ஏசி மூன்றடுக்கு ரயில்பெட்டிகளும், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில்பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு முன்பதிவற்ற சாதாரண ரயில்பெட்டிகளும், இரண்டு லக்கேஜ் பிரேக் வேன்களும் இருக்கும்.

யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 11.30 மணிக்கும், கோவையில் இருந்து இரவு 7.30 மணிக்கும் இந்த ரயில் புறப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது

English summary
To clear the extra rush of passengers during the summer season, Southern Railway is operating the following 2 Bi-weekly special trains between Coimbatore and Yesvantpur, from 10.04.2015 to 30.04.2015. T.No.06544 Coimbatore – Yesvantpur Bi-weekly Special Trains will run on Thursdays and Saturdays from Coimbatore and and T.No.06543 Yesvantpur Coimbatore Bi-weekly Special Trains will run on Wednesdays and Fridays from Yesvantpur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X