For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தேவை.. சபாநாயகரிடம் அதிமுக கொறடா புகார்

Google Oneindia Tamil News

சென்னை: கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்களும் கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அவர்கள் மீது தகுதி இழப்பு சட்ட விதி 6 - இன் படி நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வரை அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Speaker decides to send notice to 4 MLAs

கருணாஸுன் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படி பேசிய கருணாஸ் இன்னும் எம்எல்ஏவாக நீடிக்க வேண்டுமா என பல்வேறு தரப்பினர் தன்னிடம் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கருணாஸை டிடிவி ஆதரவு எம்எல்ஏவான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

லோக்சபா தேர்தல்.. சத்தம் போடாமல் பக்காவாக ரெடியாகிறது திமுக!]லோக்சபா தேர்தல்.. சத்தம் போடாமல் பக்காவாக ரெடியாகிறது திமுக!]

இவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக அதிமுக அரசின் அதிகாரப்பூர்வ டிிவ சேனலான நியூஸ் ஜெ தெரிவித்துள்ளது. எனவே அவர்கள் 4 பேர் மீது தகுதி இழப்பு சட்ட விதி 6 - இன் படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

English summary
Speaker decides to send notice to 4 MLAs who are acting against ADMK rules and regulations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X