For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கனுமா சென்னைவாசிகளே.. பொழுது போனால் கிடைக்காது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையிலுல்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 10ம் தேதியான இன்று கடைசி நாளாகும். இந்த பொழுதை விட்டால் பிறகு உடனே வாய்ப்பு கிடைக்காது என்பதை கவனத்தில் வையுங்கள் சென்னைவாசிகளே.

வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் அக்டோபர் 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 26ம் தேதி மற்றும் நவம்பர் 2ம் தேதி இதற்கான சிறப்பு முகாம்கள் 890 மையங்களில் நடத்தப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் 4,5,6,8,9,10,13 ஆகிய மண்டலங்களில் வசிப்பவர்களின் வாக்காளர் பட்டியல் மண்டல அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தங்களது மண்டல அலுவலகத்தையோ, அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்தையோ வாக்காளர்கள் விண்ணப்பங்களுக்கு அணுகலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், மற்றும் 01-01-2015 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ( 01-01-1997ம் தேதிக்கு முன்பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-A வை பூர்த்தி செய்தும் அதற்கான ஆவணங்களை இணைத்தும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.

English summary
A release from the Election Commission said Chennai people can enlist, delete or correct their names on voters list till November 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X