கடலூரில் பரபரப்பு,, பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்தவர் கைது,, பாம்பாட்டிக்கு வலைவீச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்தவர் கைது-வீடியோ

  கடலூர்: கடலூரில் பாம்பு வைத்து பூஜை நடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய பாம்பாட்டியை தேடிவருகின்றனர்.

  கடலூர் துரைசாமி நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவரது சதாபிஷேக விழா (80 வயது பூர்த்திக்கான சிறப்பு பூஜை) நடைபெற்றது. இப்பூஜையில் பாம்பை நாகராஜாவாக வைத்து அதற்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அந்த பூஜை முடியும் வரை அந்த பாம்பு படம் எடுத்து ஆடுவதை நிறுத்தாமல் அந்த பாம்பாட்டி பார்த்துக்கொண்டார். இதனை சிலர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளனர்.

  Special prayer with the snake in Cuddalore

  இந்த பதிவு வனத்துறையினர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், பாம்பிற்கு சிறப்பு பூஜை செய்த கடலூர் ஆணைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் 45 என்ற புரோகிதரை இன்று கைது செய்தனர்.

  பின்னர் அவரை குற்றவியல் நடுவர் எண்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும், இப்பாம்பினை கொண்டு வந்த பாம்பாட்டியையும் தேடி வருகின்றனர். முன்னதாக இந்த பூஜையில் யானை பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கும் உரிய அனுமதி பெறவில்லையெனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக குறிஞ்சிப்பாடி அருகே பரவனாறு தடுப்பணையில் கொக்கு, பருந்து உள்ளிட்டவற்றை வேட்டையாடி அதனை சமூகவலைத்தளத்தில் பரவவிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  One of the ceremonies held in Cuddalore Duraisamy city last few days. A special puja is performed on the site as a serpent god. Some people take it as a video and spread it on social networks. This record was taken to the attention of the forest department and investigated. One of them was arrested. The serpentine is searching for the police.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more