For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணிகள் நெரிசல் எதிரொலி: நெல்லை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

Google Oneindia Tamil News

நெல்லை: பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்னக ரயில்வேயை தென்பகுதி மக்களால் நாளுக்கு நாள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முக்கிய ரயில்கள் அனைத்தும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர் இதில் குறிபபாக சென்னை செல்லும் ரயிலில் இடம் கிடைக்காமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெல்லை-சென்னை இடையே இம்மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Special trains to Chennai

அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து வரும் 18ம் தேதி இரவு 9.05 மணிக்கு சிறப்பு ரயில் எண் 06083 இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுதினம் காலை 9.45 மணிககு நெல்லை வந்து சேரும். இநத ரயிலில் 2 ஏசி பெட்டிகள், 12 ஸ்லீப்பர் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இடம் பெறறிருக்கும்.

எழும்பூர் டூ சென்னை

இதுபோல செப்டம்பர் 25ம் தேதியும் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் எண் 06063 மறுதினம் காலை 9.45 மணிக்கு நெல்லை வந்து சேரும். இந்த இரு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நெல்லையிலிருநது சென்னை எழுப்பூருக்கு வரும் 20 மற்றும் 27ம் தேதிகளில் ஒரு சிறப்பு ரயில் எண் 06064 பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகலை 4.20 மணிக்கு சென்னையை அடையும். இந்த ரயில்களும் மதுரை, திருச்சி, விழுப்புரம் என வழக்கமான பாதையில் செலலும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.

English summary
The Southern Railway has announced the operation of following special trains to clear extra rush of traffic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X