For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலை சீசன்... பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு... 27 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக இந்தாண்டு 27 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Special Trains for Sabarimala Pilgrims

ஹைதராபாத்தில் இருந்து டிசம்பர் 11, 12, 15, 16, 19, 20, 23, 24, 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16-ந் தேதிகளில் பிற்பகல் 3.55, 3.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டணத்துடன் கூடிய தட்கல் சிறப்பு ரெயில்(வ.எண்: 07109/07133), அடுத்தநாள் இரவு 11.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து டிசம்பர் 9, 16, 13, 17, 18, 21, 23, 25. 26 மற்றும் ஜனவரி 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18-ந் தேதிகளில் பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் தட்கல் சிறப்பு ரெயில்(07110/07134), மறுநாள் காலை 10.30 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடையும்.

நிஷாமாபாத்தில் இருந்து டிசம்பர் 7, 14 மற்றும் 21-ந் தேதிகளில் பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07613), மறுநாள் இரவு 11.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 14, 22 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07614), மறுநாள் காலை 11.05 மணிக்கு நிஷாமாபாத்தை சென்றடையும்.

மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 13-ந் தேதி இரவு 7.40 மணிக்கு இயக்கப்படும் தட்கல் சிறப்பு ரெயில்(07275/07221), மறுநாள் இரவு 11.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07276), மறுநாள் மாலை 5.45 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தை சென்றடையும்.

காக்கிநாடாவில் இருந்து டிசம்பர் 15, 16, 18, 19, 21, 22, 24, 25 மற்றும் ஜனவரி 1, 2, 4, 5, 7, 8, 10, 11, 13, 14-ந் தேதிகளில் இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07211), 3-வது நாள் நள்ளிரவு 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து டிசம்பர் 17, 18, 20, 21, 23, 24, 26, 27 மற்றும் ஜனவரி 3, 4, 6, 7, 9, 10, 12, 13, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07212), மறுநாள் காலை 6.15 மணிக்கு காக்கிநாடாவை சென்றடையும்.

நர்சாபூரில் இருந்து டிசம்பர் 30, 31-ந் தேதிகளில் இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07217), 3-வது நாள் நள்ளிரவு 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து ஜனவரி 1, 2-ந் தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07218), அடுத்தநாள் காலை 6.40 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

விஜயவாடாவில் இருந்து டிசம்பர் 7, 10 மற்றும் 23-ந் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07219), அடுத்தநாள் 3-வது நாள் 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 9, 22 மற்றும் 25-ந் தேதிகளில் காலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07220), அடுத்தநாள் காலை 4 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும்.

மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 17, 20-ந் தேதிகளில் இரவு 10.05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07221), 3-வது நாள் நள்ளிரவு 12.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 12, 19-ந் தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07222), அடுத்தநாள் காலை 5.45 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தை சென்றடையும்.

விஜயவாடாவில் இருந்து ஜனவரி 3, 6-ந் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07213), 3-வது நாள் காலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து ஜனவரி 5, 14-ந் தேதி காலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்(07214), மறுநாள் காலை 7.30 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும்.

மச்சிலிப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 9, 12-ந் தேதி இரவு 11 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07215), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து ஜனவரி 8, 11-ந் தேதி காலை 5.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07216), அடுத்த நாள் காலை 9 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தை சென்றடையும்.

அவுரங்காபாத்தில் இருந்து டிசம்பர் 8, 22-ந் தேதி காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07505), 3-வது நாள் காலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

அகோலாவில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07507), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். அடிலாபாத்தில் இருந்து டிசம்பர் 29-ந் தேதி பகல் 12 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07509), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

சிர்பூர்கழநகரில் இருந்து ஜனவரி 4, 10-ந் தேதி இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07111), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து டிசம்பர் 30, ஜனவரி 6, 12-ந் தேதி காலை 5.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07112), மறுநாள் பகல் 12 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும்.

கரீம்நகரில் இருந்து டிசம்பர் 28-ந் தேதி இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07113), 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து டிசம்பர் 10, 17, 24 மற்றும் 31-ந் தேதிகளில் காலை 5.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(07506), அன்றைய தினம் இரவு 11.15 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Southern Railway on Saturday announced 27 special trains to Kollam from different southern states for the convenience of pilgrims visiting Sabarimala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X