For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. கலாய் வாங்கிய "நியூஸ் ஜெ."

முதல்நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் நாளிலேயே எழுத்து பிழையுடன் தொடங்கிய 'நியூஸ் ஜெ'

    சென்னை: நியூஸ் ஜெ சேனல், ஆரம்பித்த முதல் நாளிலேயே பரபரப்பான சேனலாக ஃபேமஸ் ஆகி விட்டது.

    முதமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தங்களது கட்சிக்காகவும் ஆட்சிக்காகவும் நியூஸ் ஜெ. தொலைக்காட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள். ஜெயா டிவி தங்கள் கையை விட்டு போன நிலையில், தங்களது கட்சிக்கென ஒரு டி.வி தேவைப்படவே இதனை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    நியூஸ் ஜெ-வின் லோகோ அறிமுகம், இணையதளத்தின் தொடக்கம் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசப்பட்டவை அனைத்தும் நியூஸ்ஜெ டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவாகியது.

    வால்முனை-வாள்முனை

    வால்முனை-வாள்முனை

    அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசிய ஒரு டுவீட்டில் "நாட்டை ஆளும் மன்னனின் வால் முனையை விட பேனா முனை கூர்மையானது" என பதிவு செய்யப்பட்டுள்ளது. 'வாள் முனை' என்பதற்கு பதிலாக 'வால்முனை' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்துவிட்டது. இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை டுவிட்டர்வாசிகள் உடனே பார்த்துவிட்டு சுட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அது திருத்தப்படவே இல்லை. சேனல் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? என கலாய்தான் வந்தது.

    எம்ஜிஆர், ஜெயலலிதா

    எம்ஜிஆர், ஜெயலலிதா

    முன்னதாக, விழா தொடங்கும்போது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மேடையில் இருந்த டிஜிட்டல் திரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாமலேயே நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. நிர்மலா பெரியசாமிதான் நிகழ்ச்சியை தொகுத்து கொடுத்து கொண்டிருந்தார்.

    அம்மா படம் எங்கே?

    அம்மா படம் எங்கே?

    அப்போது திடீரென கூட்டத்திலிருந்து முன்னாள் பெண் கவுன்சிலர்கள் "அம்மா படம் எங்கே, அம்மா படம் எங்கே" என்று சத்தம் போட்டு கூச்சல் எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இதனால் செய்வதறியாது மேடையில் அனைவரும் விழித்தனர். பின்னர் நிர்மலா பெரியசாமியோ, "வரும்... வரும்.. கண்டிப்பா படம் வரும்" என்று மைக்கிலே சமாளித்தார். அதன் பின்னரே ஜெயலலிதாவின் பெரிய படம் டிஜிட்டல் திரையில் தோன்றியது.

    English summary
    Spelling error on the first day of the News J channel launch
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X