For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 முனை போட்டி.. ஓட்டுகள் பிரிந்து அதிமுகவிற்கு அள்ளித் தந்த வெற்றி!

By Mayura Akilan
|

சென்னை: தமிழகத்தில் எதிர் தரப்பு வாக்குகள் திமுக- பாஜக கூட்டணி என்று பிரிந்ததே அதிமுக அதிக இடங்களில், குறிப்பாக 26 தொகுதிகளில் வெல்ல காரணமாகியுள்ளது.

16வது லோக்சபா தேர்தலில் முதன்முறையா ஆளும் கட்சியான அதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே), புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து வானவில் கூட்டணியாக போட்டியிட்டன.

காங்கிரஸ் கட்சி தனித்தும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து தனி அணியாகவும் போட்டியிட்டன.

இவை தவிர, தமிழகத்தில் முதல்முறையாக களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.

5 முனை போட்டி

5 முனை போட்டி

தமிழகத்தில் முதன்முறையாக இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவியது. 35 தொகுதிகளில் திமுக அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவியது. இந்த தொகுதிகளில் அதிமுக அல்லது திமுகவுக்கு இணையாக பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் சம பலத்துடன் நிறுத்தப்பட்டனர்.

சிதறிய ஓட்டுக்கள்

சிதறிய ஓட்டுக்கள்

எதிர்தரப்பினர் ஓட்டுக்கள் தனித்தனியாக பிரிந்தன. அதேசமயம் ஆளும்கட்சியான அதிமுக ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைத்தன. எதிர்தரப்பு மீதான எரிச்சலும் அதிமுகவிற்கு வாக்குகளாக கூடுதலாக வந்து சேர்ந்தன. இதுவே அதிமுக வெற்றி பெற காரணமாக அமைந்தது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அந்த விவரத்தை கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போம்...

1. அரக்கோணத்தில் ஹரி

1. அரக்கோணத்தில் ஹரி

அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஹரி பெற்ற வாக்குகள் 493534. திமுக வேட்பாளர் இளங்கோவிற்கு 252768 வாக்குகள் கிடைத்துள்ளன. பாமகவைக் சேர்ந்த வேலு பெற்ற வாக்குகள் 233762.

இங்கு திமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 486530. இத்துடன் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் பெற்ற 56337 வாக்குகளை சேர்த்தால் 542867 வருகிறது. ஆக, அதிமுகவின் ஹரி வெல்ல எதிர் வாக்குகள் பிரிந்ததே முக்கிய காரணம்.

2. ஆரணியில் ஏழுமலை

2. ஆரணியில் ஏழுமலை

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏழுமலை பெற்ற வாக்குகள் 502721. அதே சமயம் திமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 512209 வருகிறது. காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத் பெற்ற வாக்குளை சேர்த்தால் 539926 எனவே இங்கும் வாக்குகள் சிதறியதே அதிமுக வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

3. மத்திய சென்னை விஜயகுமார்

3. மத்திய சென்னை விஜயகுமார்

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை சாய்த்த அதிமுக வேட்பாளர் விஜயகுமார் பெற்ற வாக்குகள் 333296. எதிர்தரப்பைச் சேர்ந்த வேட்பாளர்களான திமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மொத்தம் 402253 வாக்குகள் பெற்றுள்ளனர். அதோடு காங்கிரஸ் வேட்பாளர் மெய்யப்பன் பெற்ற வாக்குகளை சேர்த்தால் 428234 வாக்குகள் பதிவாகியுள்ளன.

4. தென் சென்னை ஜெயவர்த்தன்

4. தென் சென்னை ஜெயவர்த்தன்

தென் சென்னையில் அதிமுகவின் இளம் வேட்பாளர் ஜெயவர்த்தன் பெற்ற வாக்குகள் 438404, அதே சமயம் திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்- 301779 வாக்குகளும், பாஜகவின் இல.கணேசன்- 256786 வாக்குகளும் பெற்றுள்ளனர். இரண்டையும் கூட்டினால்
558565. காங்கிரஸ் கட்சியின் ரமணி பெற்ற வாக்குகள் 24420 வருகிறது இவற்றையும் சேர்த்தால் எதிர் தரப்பில் 582985 வாக்குகள் பதிவாகியுள்ளன.

5. திருமாவளவன் தோற்ற சிதம்பரம்

5. திருமாவளவன் தோற்ற சிதம்பரம்

சிதம்பரம் தொகுதியில் திருமாவளன் அதிக நம்பிக்கையுடன் இருந்தார் ஆனாலும் தோல்வியை தழுவினார். இங்கு அதிமுக வேட்பாளர் சந்திரகாசி பெற்ற வாக்குகள் 429536. வி.சியின் திருமாளவனுக்கு 301041 வாக்குகளும், பாமகவின் சுதா மணிரத்தினத்திற்கு 279016 கிடைத்துள்ளன. இரண்டையும் கூட்டினால் 580057 வாக்குகள் வருகின்றன. அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதோடு காங்கிரஸ் கட்சியின் வள்ளல் பெருமான் பெற்ற 28988 வாக்குகளைச் சேர்க்கும் போது அதிமுகவுக்கு எதிராக 609045 வாக்குகள் பதிவாகியுள்ளன.

6. பாஜகவை ஏமாற்றிய கோவை

6. பாஜகவை ஏமாற்றிய கோவை

கோவை தொகுதியில் பாஜகவிற்கு வெற்றி உறுதி என்று கூறப்பட்டது ஆனால் அதிமுகவின் நாகராஜன் 431717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 389701, திமுகவின் கணேஷ்குமார் பெற்ற வாக்குகள் 217083. இரண்டையும் சேர்த்தால் 606784 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதோடு காங்கிரஸ் கட்சியின் பிரபு பெற்ற வாக்குகளான 56962ஐ கூட்டினால் 663746 வாக்குகளும், சிபிஎம்மின் நடராஜன் வாக்குகளை பெற்ற 34197 சேர்த்தால் 697943 வாக்குகளும் எதிர் தரப்புக்கு கிடைத்துள்ளன.

7. திண்டுக்கல்லில் ஓய்ந்த சித்தன்

7. திண்டுக்கல்லில் ஓய்ந்த சித்தன்

திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவின் உதயகுமார் பெற்ற வாக்குகள் 510462. திமுகவின் காந்திராஜன் 382617, தேமுதிகவின் கிருஷ்ணமூர்த்தி 93794, காங்கிரஸ்- என்.எஸ்.வி. சித்தன் 35632, சிபிஎம் கட்சியின் பாண்டி 19455 ஆகிய எதிர்தரப்பினர் அனைவரும் பெற்ற வாக்குகளை சேர்த்தால் 531498 வாக்குகள் வருகின்றன.

8. ஈரோட்டில் ஏமாந்த கணேசமூர்த்தி

8. ஈரோட்டில் ஏமாந்த கணேசமூர்த்தி

ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வகுமார் 466995 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் மதிமுகவின் கணேசமூர்த்தி 255432 வாக்குகளும், திமுகவின் பவித்திரவள்ளி 217260 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவரும் இணைந்து மொத்தம் 472692 வாக்குகளை பெற்றுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் வேட்பாளர் கோபி பெற்ற 26726 வாக்குகளையும் இணைத்தால் 499418 வாக்குகளை எதிர்தரப்பினர் பெற்றுள்ளனர்.

9. கள்ளக்குறிச்சி காமராஜ்

9. கள்ளக்குறிச்சி காமராஜ்

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுகவின் காமராஜ் 533383 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் எதிர்தரப்பு வேட்பாளர்களான திமுகவின் மணிமாறன் பெற்ற 309876 வாக்குகளையும், தேமுதிகவின் ஈஸ்வரன் பெற்ற 164183 வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளர் தேவதாஸ் பெற்ற 39677 வாக்குகளையும் சேர்க்கும் போது 513736 வாக்குகள் பதிவாகியுள்ளன.

10. காஞ்சிபுரம் மனதொடிந்த சத்யா

10. காஞ்சிபுரம் மனதொடிந்த சத்யா

காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுகவின் மரகதம் சந்திரசேகர் பெற்ற வாக்குகள் 499395. அதேசமயம் திமுகவின் செல்வம் 352529 வாக்குகளும், மதிமுகவின் சத்யா 207080 வாக்குகளும் சேர்த்து 559609 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றோடு காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் பெற்ற 33313 வாக்குகளை சேர்த்தால் எதிர் தரப்பு பெற்ற வாக்குகள் 592922.

11. கிருஷ்ணகிரி அசோக்குமார்

11. கிருஷ்ணகிரி அசோக்குமார்

கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக அசோக் குமார் 480491 வாக்குகள் பெற்றுள்ளார். திமுகவின் சின்ன பில்லப்பா 273900 வாக்குகள் பெற்றுள்ளார். பாமகவின் ஜி.கே.மணி- 224963 வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டையும் சேர்த்தால் 498863 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றோது காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் பெற்ற 38885 வாக்குகளை சேர்த்தால் 537748 எதிர் தரப்பில் பதிவாகியுள்ளன.

12. மதுரை கோபாலகிருஷ்ணன்

12. மதுரை கோபாலகிருஷ்ணன்

மதுரை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 454167 வாக்குகளை பெற்றுள்ளார். அதேசமயம் திமுகவின் வேலுசாமி 256731 வாக்குகளையும், தேமுதிகவின் சிவமுத்துக் குமார் 147300 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதோடு காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சியப்பன் 32143 வாக்குகளையும் சிபிஎம் வேட்பாளர் விக்ரமன் பெற்ற 30108 வாக்குகளையும் சேர்த்தால் 466282 வாக்குகள் எதிர்தரப்பினருக்கு பதிவாகியுள்ளன.

13. நாகப்பட்டிணம்

13. நாகப்பட்டிணம்

நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுகவின் கோபால் 434174 பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு திமுகவின் விஜயன் 328095வாக்குகளையும், சிபிஐ பழனிச்சாமி 90313 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதோடு பாமகவின் வடிவேல் ராவணன் 43506 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் செந்தில் பாண்டியன் பெற்ற 23967 வாக்குகளையும் சேர்த்து எதிர்தரப்பினர் 485881 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

14. பெரம்பலூர் பாரிவேந்தர் பரிதாபம்

14. பெரம்பலூர் பாரிவேந்தர் பரிதாபம்

பெரம்பலூர் தொகுதியில் அதிமுகவின் மருதைராஜாவிற்கு பதிவான வாக்குகள் 462693. அதேசமயம் திமுகவின் சீமானூர் பிரபு 249645 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர் 238887 பெற்ற வாக்குகளையும் இணைத்தால் 488532 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதோடு காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன் பெற்ற 31998 வாக்குகளையும் சேர்த்தால் 520530 வாக்குகள் எதிர்தரப்பினர் பெற்றுள்ளனர்.

15. பொள்ளாச்சி மகேந்திரன்

15. பொள்ளாச்சி மகேந்திரன்

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் பெற்ற வாக்குகள் 417092. அதேசமயம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் 276118 வாக்குகளை பெற்றுள்ளார். அதோடு திமுகவின் பொங்கலூர் பழனிச்சாமி பெற்ற 251829 வாக்குகளை சேர்த்தால் எதிர்தரப்பினருக்கு 527947 வாக்குகள் கிடைத்துள்ளன.

16. ராமநாதபுரம் அன்வர்ராஜா

16. ராமநாதபுரம் அன்வர்ராஜா

ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜா பெற்ற வாக்குகள் 405945. அதேசமயம் திமுகவின் முகம்மது ஜலீல் 286621 வாக்குகளையும், பாஜகவின் குப்புராமு பெற்ற 171082 வாக்குகளையும் கூட்டினாலே 457703 வருகிறது.

இதோடு காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் 62160, சிபிஐ கட்சியின் உமாமகேஷ்வரி 12312 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

17. சிவகங்கையில் காணாமல் போன கார்த்தி

17. சிவகங்கையில் காணாமல் போன கார்த்தி

சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 469189 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதேசமயம் திமுகவின் துரைராஜ் சுபா பெற்ற வாக்குகள் 244045. இவற்றோடு பாஜகவின் எச்.ராஜா பெற்ற 132814 வாக்குகளையும், காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் 103273 பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் 480132 வருகிறது.

இதோடு சிபிஐ கிருஷ்ணன் பெற்ற 20164 வாக்குகளை இணைத்தால் 500296 வாக்குகள் எதிர்தரப்பினருக்குப் பதிவாகியுள்ளன.

18. ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன்

18. ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன்

ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் அதிமுகவின் ராமச்சந்திரன் பெற்ற வாக்குகள் 545820. திமுகவின் ஜெகத்ரட்சகன்- 443174 வாக்குகளையும், மதிமுகவின் மாசிலாமணி 187094 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இரண்டையும் கூட்டினால் 630268 பதிவாகியுள்ளன. அதோடு காங்கிரஸ் கட்சியின் அருள் அன்பரசு வேறு 39015 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

19. தென்காசி வசந்தி

19. தென்காசி வசந்தி

தென்காசி தொகுதியில் அதிமுகவின் வசந்தி பெற்ற வாக்குகள் 424586. எதிர் தரப்பில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பெற்ற வாக்குகள் 262812. மதிமுகவின் சதன் திருமலைக்குமார் பெற்ற வாக்குகள் 190233. இரண்டையும் கூட்டினால் 453045 வாக்குகள் வருகின்றன. இவற்றோடு காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 58963 வாக்குகளும்,
சிபிஐ கட்சியைச் சேர்ந்த லிங்கம் 23528 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

20. தூத்துக்குடி நட்டர்ஜி

20. தூத்துக்குடி நட்டர்ஜி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் ஜெயசிங் தியாகராஜ் நட்டார்ஜி பெற்ற வாக்குகள் 366052. திமுகவின் ஜெகன் பெற்ற வாக்குகள் 242050. அதோடு மதிமுகவின் ஜோயல் 182191 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டையும் கூட்டினால்
424241 பதிவாகியுள்ளன.

இதோடு காங்கிரஸ் கட்சியின் சண்முகம் 63080 வாக்குகளும், சிபிஐ கட்சியின் மோகன்ராஜ் 14993வாக்குகளும் பெற்றுள்ளனர்.

21. திருநெல்வேலி பிரபாகரன்

21. திருநெல்வேலி பிரபாகரன்

திருநெல்வேலி தொகுதியில் அதிமுகவின் பிரபாகரன் பெற்ற வாக்குகள் 398139. திமுகவின் தேவதாஸ் சுந்தரம் 272040 வாக்குகளைப் பெற்றுள்ளார். தேமுதிகவின் சிவனனைந்த பெருமாள் பெற்ற வாக்குகள் 127370 அதோடு காங்கிரஸ் கட்சியின் ராமசுப்பு பெற்ற 62863 வாக்குகளையும் சேர்த்தால் எதிர் தரப்பு வாங்கிய ஓட்டுக்கள் 462273.

22. திருப்பூர் சத்யபாமா

22. திருப்பூர் சத்யபாமா

திருப்பூர் தொகுதியில் அதிமுகவின் சத்யபாமா பெற்ற வாக்குகள் 442778. அதேசமயம் தேமுதிகவின் தினேஷ்குமார் 263463 வாக்குகளையும், திமுகவின் செந்தில்நாதன் 205411 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இரண்டையும் கூட்டினால் மொத்தம் 468874 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 47554 வாக்குகளையும், சிபிஐ- சுப்பராயன் 33331 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

23. திருவண்ணாமலை வனரோஜா

23. திருவண்ணாமலை வனரோஜா

திருவண்ணாமலையில் அதிமுகவின் வனரோஜா பெற்ற வாக்குகள் 500751. திமுகவின் அண்ணாதுரை 332145 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவற்றோடு பாமகவின் எதிரொலி மணியன் 157954 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் சுப்பிரமணியன் 17854 வாக்குகளையும் கூட்டினால் 507953 வாக்குகள் எதிர்தரப்பினருக்குப் பதிவாகியுள்ளன.

24. வேலூர் செங்கூட்டுவன்

24. வேலூர் செங்கூட்டுவன்

வேலூரில் அதிமுகவின் செங்கூட்டுவன் 383719 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு பாஜகவின் ஏ.சி. சண்முகம் பெற்ற வாக்குகள் 324326. இதனுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அப்துல் ரஹ்மான் பெற்ற 205896 வாக்குகளை கூட்டினால் 530222 எதிர்தரப்பினருக்குப் பதிவாகியுள்ளது. தவிர காங்கிரஸ் கட்சியின் விஜய் இளஞ்செழியன் 21650 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

25. விழுப்புரம் ராஜேந்திரன்

25. விழுப்புரம் ராஜேந்திரன்

விழுப்புரத்தில் அதிமுக ராஜேந்திரன் பெற்ற வாக்குகள் 482704. திமுகவின் முத்தையன் 289337 பெற்றுள்ளார். இதோடு தேமுதிகவின் உமா சங்கர் பெற்ற 209663 வாக்குகளை கூட்டினால் 499000 வாக்குகள் எதிர்தரப்பினருக்கு பதிவாகியுள்ளது. இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியின் ராணி 21461 வாக்குகளையும், சிபிஎம்- ஆனந்தன் 17408 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

26. விருதுநகர் ராதாகிருஷ்ணன்

26. விருதுநகர் ராதாகிருஷ்ணன்

விருதுநகரில் அதிமுகவின் ராதாகிருஷ்ணன் 406694 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேசமயம் மதிமுகவின் வைகோ 261143 வாக்குகளைப் பெற்றுள்ளார். திமுகவின் ரத்தினவேலு 241505 வாக்குகளைப் பெற்றுள்ளார். திமுக- மதிமுக வாக்குகளை கூட்டினால் 502648 பதிவாகியுள்ளன. இதோடு காங்கிரஸ் கட்சியின் மாணிக்க தாகூர் 38482 வாக்குகளையும், சிபிஎம் சாமுவேல்ராஜ் 20157 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சிந்தாமல் சிதறாமல்

சிந்தாமல் சிதறாமல்

இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பதிவாகியுள்ளது. எதிர்தரப்பினரின் வாக்குகள் சிதறியது ஒருபுறம் இருக்க, புதிய வாக்காளர்கள் காங்கிரஸ், திமுகவின் மீதான எதிர்ப்பு காரணமாக தங்களுடைய வாக்குகளை அதிமுகவிற்கு அளித்துள்ளனர். இதுவே அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

English summary
It was one of the few constituencies in the State which even some exit polls had found too close to call. Some pre-poll surveys had even tipped a DMK win. Given the multi-cornered fight, the Tiruchi constituency was widely expected to witness a close contest in the Lok Sabha election and many had predicted that the margin of victory would be thin, whoever emerged the victor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X