For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாற்றில் முதன்முறையாக- நடுக்கடலில் தவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்; காப்பாற்றிய இலங்கை கடற்படை!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே படகு பழுதாகி கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினர்.

கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து பாஸ்கரன், மாரிமுத்து, சீனிபாண்டி உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, கச்சதீவு அருகே அவர்கள் சென்ற படகு பழுதானது. இதனை அடுத்து கரை திரும்பாத மீனவர்களை, சக மீனவர்கள் 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்டு அவர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Sri lanakan navy recover TN fishermen from sea

அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 1 மணி அளவில் ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தனர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களை மீட்ட இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த 21 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து செல்வராஜ் என்பவரது விசைபடகில் ஆனந்து நாதன் பாண்டி பாஸ்கரன் ,மாரிமுத்து ;சீனிபாண்டி உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்

இவர்கள கச்சத்தீவு அருகே மீன்பிடித்தக் கொன்டிருந்த போது திடீரென படகு பழுதானது இந்நிலையில் சக மீனவர்கள் மாயமான மீனவர்களை மூன்று நாட்களாக தேடியும் கண்டு பிடிக்க முடியாததால் உறவினர்களிடையே பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றுக்காலை கச்சத்தீவுப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட வந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தவித்து வந்த மீனவர்களையும் படகையும் பத்திரமாக மீட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இது குறித்த தகவல் கொடுக்கப்பட்டது

இந்நிலையில் மீட்கப்பட்ட மீனவர்களையும் படகையும் மன்னார் கடற்படைமுகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர் இதனையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நேற்று இரவு 7 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோரகாவல் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.இவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதையடுத்து மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்

கரை திரம்பிய மீனவர்கள் கூறும் போது, நாங்கள் கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்த மீன்பிடிக்கச் சென்றோம் அப்போது இன்ஜின் பழுதாகியது எங்களை இரண்டாவது நாள் கச்சத்தீவு அருகே தேடிவந்த சக மீனவர்கள் இலங்கை கடற்படைக்கு அஞ்சி திரும்பிச் சென்று விட்டனர். மீண்டும் மூன்றாவது நாள் எங்களை மீட்கவந்த சக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் படகை சரி செய்து அனுப்பிவைக்கின்றோம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் எனக்கூறியதால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள்.

பின் கடற்படையினர் கூறியதைப்போல எங்களை மீட்டு இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின் நாங்கள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். எங்களை மீட்ட இலங்கை கடற்படையினருக்கும் நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்கள்.

English summary
Sri lankan navy cares the Tamil Nadu fishermen from sea side, they got boat tragedy due to failure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X