• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

BREAKING NEWS: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

By Siva
|

சென்னை: வளி மண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

  News Wallet | தமிழக மீனவர்கள் கைது | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?- வீடியோ

  Newest First Oldest First
  8:11 PM, 5 Jul
  Go Back Modi’ என சொன்ன தமிழகம் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும்: தமிழிசை

  தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை - தமிழிசை

  4:57 PM, 5 Jul
  அதிமுக ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்பலாம் என மக்கள் காத்துக்கொண்டு உள்ளனர்: புகழேந்தி

  சசிகலாவின் பெயரை சொல்லி சிலர் பெயர் வாங்க முயற்சி - புகழேந்தி

  சசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதி கேட்டு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை - புகழேந்தி

  கேமராக்களை தாண்டி யாரும் சிறையில் இருந்து வெளியே வர முடியாது -புகழேந்தி

  4:28 PM, 5 Jul
  பள்ளி வேலை நாளில் நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து-செங்கோட்டையன்

  விடுமுறை நாட்களிலோ, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகோ நீட் பயிற்சி அளிக்கலாம்

  சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தகவல்

  3 வருடங்களுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்-செங்கோட்டையன்

  சட்டசபையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

  3:41 PM, 5 Jul
  என்கவுன்டர் எதிரொலி: ரவுடி ஆனந்தனின் கூட்டாளி தற்கொலை முயற்சி

  ரவுடி ஆனந்தனின் கூட்டாளி புலி அருண் என்பவர் தற்கொலைக்கு முயற்சி

  தற்கொலைக்கு முயன்ற அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

  2:12 PM, 5 Jul
  சென்னையில் தலைமை செயலகத்தில் கிழிந்த நிலையில் தேசியக் கொடி

  புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பறக்கும் கொடியே கிழிந்து போயுள்ளது

  கிழிந்த தேசியக் கொடியை பார்த்து மக்கள் வேதனை தெரிவித்தனர்

  சட்டமன்றக் கூட்டத்தொடர் நடப்பதால் அமைச்சர்கள், அதிகாரிகள் ஏராளமானோர் வருகை

  தினமும் அமைச்சர்கள், அதிகாரிகள் வந்த போதிலும் கொடியை மாற்ற நடவடிக்கை இல்லை

  1:35 PM, 5 Jul
  வளி மண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை

  காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

  காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு

  தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  1:28 PM, 5 Jul
  காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

  வெப்ப சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

  1:23 PM, 5 Jul
  தோப்பூரில் துணைக்கோள் நகரம் - தமிழக அரசு அறிவிப்பு

  எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் துணைக்கோள் நகரம்

  துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது- சட்டசபையில் தகவல்

  1:10 PM, 5 Jul
  எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம்- முதல்வர் அறிவிப்பு
  12:28 PM, 5 Jul
  இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும்

  சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

  பின்பக்க சீட்டில் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

  12:11 PM, 5 Jul
  விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு

  கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

  11:40 AM, 5 Jul
  காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் துவக்கம்

  மத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் தலைமையில் கூட்டம்

  தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில தலைமை பொறியாளர்கள் பங்கேற்பு

  தமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்பு

  11:19 AM, 5 Jul
  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுப்பு

  தமிழக அரசின் தடையை நீக்க கோரிய வேதாந்தா குழுமத்திற்கு பின்னடைவு

  11:11 AM, 5 Jul
  ஸ்டெர்லைட் விசாரணை தொடங்கியது

  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரும் மனுமீதான விசாரணை ஆரம்பம்

  தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

  11:05 AM, 5 Jul
  அந்தமான் தீவில் நில நடுக்கம்

  ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு

  24 மணி நேரத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்

  10:55 AM, 5 Jul
  நடிகர் எஸ்.வி.சேகருக்கு கரூர் கோர்ட் கண்டிப்பு

  நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சேகருக்கு நீதிபதி கண்டனம்

  பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க உத்தரவு

  ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் என்றும் எச்சரிக்கை

  10:55 AM, 5 Jul
  சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரில் வருமான வரி சோதனை

  கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் சோதனை

  மொத்தம் 76 இடங்களில் வருமான வரி சோதனை

  500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

  திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை

  கிருஷ்டி ஃபிரைடுகிராம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்ததால் சோதனை

  10:42 AM, 5 Jul
  இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை

  7 பேர் 3 மணி நேரம் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்

  10:22 AM, 5 Jul
  தூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை - மு.க.ஸ்டாலின்

  தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்றுதான் சொல்லவேண்டும்- மு.க.ஸ்டாலின்

  10:11 AM, 5 Jul
  சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர்க்கு முன் ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
  10:11 AM, 5 Jul
  தொடங்கிய வேகத்தில் முடிந்தது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு

  காலை முதல் காத்திருந்தோர் ஏமாற்றம்

  7:46 AM, 5 Jul
  இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

  கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

  மேலும் சில மீனவர்கள் விரட்டியடிப்பு

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Sri Lankan navy has arrested 15 fishermen from Tamil Nadu who were fishing near Katchatheevu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X