For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை அதிபர் சிறிசேனா 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை அதிபர் சிறிசேனா 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசுகிறார்.

இங்கிலாந்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார். அதன் பிறகு சிறிசேனாவுக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.

Sri Lankan President Maithripala Sirisena to visit India today

இதைத்தொடர்ந்து நாளை மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினிக்கு செல்லும் சிறிசேனா, மகா கும்பமேளா நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். சாஞ்சி நகருக்கு சென்று உலக புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிடுகிறார்.

இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்காரிகா தர்மபாலா சிலையை திறந்து வைக்கிறார். அவரது வருகை, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்கின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் வருகை தரும் சம்பந்தன், கும்பமேளா நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இலங்கை அதிபரின் வருகையை முன்னிட்டு மத்தியப்பிரதேச மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரு‌கிறது.

English summary
Sri Lankan President Maithripala Sirisena will be embark on a two day visit to India on May 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X