For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை அரசு இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்

இலங்கை இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

குற்றாலம்: இலங்கை இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை.

Srilanka Is Closer To China Than India Vigneshwaran

இதனால் ஆட்சியில் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி வருகிறது எனினும் 2020 வரை ஆட்சியை கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் முயன்று வருகின்றனர் தமிழர்களின் உரிமைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களது விளை நிலங்கள் அரசாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது இதனால் தமிழர்கள் வீ்டுகளை விளை நிலங்களை இழந்து தவிக்கும் நிலை உள்ளது அவர்களுக்கு அதனை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

வடக்கு கிழக்கு மாகாண மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையும் பறிபோகிறது தெற்கிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்க செய்கின்றனர். இவை அனைத்தையும் சரி செய்ய அரசியல் அதிகாரம் இல்லை. 1987ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை.

அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமையும் பறிபோய்விட்டது. அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை வடக்கு மாகாண பகுதிகளில் இராணுவம் 1 1/2 லட்சம் வீரர்களை அப்புறப்படுத்த மறுக்கிறது விலை நிலங்கள் கட்டிடங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கபடுகிறது.

இந்தியாவுடனான உறவு நெருக்கமான தாக தெரியவில்லை. எங்கள் மத்திய அரசு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. வடக்கு மாகாண

மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது. வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளவர்கள் குடியேற்றப்பட வேண்டும்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் இலங்கையில் தற்போது தனி நாடு கோரிக்கை இல்லை மாநில சுயாட்சி வேண்டும் ஒரே இலங்கை என்பதே கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்' என இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

English summary
Srilanka Northern Province Chief Minister Vigneshwaran said Sri Lanka is closer to China than India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X