For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயோ... ஸ்ரீரங்கத்தில் 5 முனைப் போட்டி(!): டி.ராஜேந்தர் கட்சியும் போட்டி!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களத்தில் லட்சிய திமுகவும் குதித்துள்ளது. ஏற்கனவே அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக என நான்குமுனை போட்டி உருவாகியுள்ள நிலையில் டி.ராஜேந்தரும் தனது வேட்பாளரை களமிறக்க உள்ளதால் 5 முனைப் போட்டியை எதிர்கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் தொகுதி.

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் ஆளும் அண்ணா தி.மு.க, தி.மு.க. மார்க்சிஸ்ட் கட்சி, தே.மு.தி.க. ஆதரவுடன் பாரதிய ஜனதா என 4 கட்சிகள் களத்தில் இருக்கின்றன.

Srirangam by-poll: LDMK decides to jump into fray

இந்த 4 கட்சிகளுடன் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் லட்சிய தி.மு.க.வும் கோதாவில் குதிக்கிறது. இதற்காக விஜய டி.ராஜேந்தரின் சகோதரர் வாசு இன்று ஸ்ரீரங்கம் வந்து வேட்பு மனு வாங்கிச்சென்றுள்ளார்.

லட்சிய தி.மு,க. தலைவர் டி.ராஜேந்தர் 27ந் தேதி திருச்சி வருகிறார். அன்று கட்சி சார்பில் வேட்பாளராக வாசு அறிவிக்கப்படுவார்.

அன்றைய தினமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

English summary
The Srirangam by-poll may witness one more entrant, with T.Rajender's LDMK deciding to field its candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X