For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கல்லூரி மாணவிகளை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Srivilliputhur court dismissed Professor Nirmaladevi bail petition

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் கருப்பசாமி, முருகன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
Srivilliputhur court dismissed Professor Nirmaladevi bail petition. And Karuppasami, Murugan bail petition trial postponed for 18th May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X