For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருந்தாவது மாத்திரையாவது.. 108 முறை நமோ நாராயணானு சொல்லுங்க.. கொரோனா ஓடிரும்.. ஜீயர் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: 108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும் என ஜீயர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    மருந்தாவது மாத்திரையாவது.. 108 முறை நமோ நாராயணானு சொல்லுங்க.. கொரோனா ஓடிரும்.. ஜீயர் பரபர பேட்டி

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், கொரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

    செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு கொரோனா உறுதி.. சென்னையில் சிகிச்சை செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு கொரோனா உறுதி.. சென்னையில் சிகிச்சை

    ஆடிப்பூர தேரோட்டம்

    ஆடிப்பூர தேரோட்டம்

    இந்து சமய அறநிலையத்துறை தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும். அனைத்து கோயில்களும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொரோனா ஓடிரும்

    கொரோனா ஓடிரும்

    108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை கொரோனா தானாக ஓடிவிடும் என்று ஜீயர் தெரிவித்தார்.

    குருமாரே சொல்லலாமா

    குருமாரே சொல்லலாமா

    நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை மத்திய மாநில அரசுகள் சிறப்பாக கையாண்டு வருவதாக கூறும் ஜீயர் இது போல் பொறுப்பற்ற பேச்சை பேசுவது சரியா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதுவும் ஒருவித மத பிரச்சாரம்தானே, இதை ஒரு குருமாரே செய்ய சொல்லலாமா என கேட்கிறார்கள்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் 74 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மருத்துவர்கள்தான் கடவுளாக தெரிவார்கள். அவர்கள் தங்களை எப்படியாயினும் காத்துவிடுவார்கள் என நம்பிக்கையில் உள்ள நோயாளிகளுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது என சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன.

    English summary
    Srivilliputhur Sadagoba Jeeyar says that no need of medicines for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X