For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல் ஆளாக கருணாநிதி வாழ்த்து

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வந்ததைத் தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளிவந்திருக்கின்றது. இதில் 499 மதிப்பெண்கள் பெற்று மாணவி பிரேமசுதா, விருதுநகர் மாணவர் சிவக்குமார் ஆகிய இருவரும் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 50 மாணவர்கள் இரண்டாம் இடமும், 497 மதிப்பெண்கள் பெற்று 224 மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

SSLC exam results: Karunanidhi wishes students

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 10 இலட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதி 93.6 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு 92.9 சதவிகித மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அதை விட அதிக மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்த ஆண்டு மாணவர்கள் 91.3 சதவிகிதம் பேரும், மாணவிகள் 95.9 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has wished the students who have cleared SSLC exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X