For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. கோர்ட்டில் "டக் டக்" பதில்.. அசத்திய ஸ்டாலின்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த தனது கொளத்தூர் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகி குறுக்கு விசாரணைக்குப் பதிலளித்தார் மு.க.ஸ்டாலின்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று முக்கியமான நாளாக மாறிப் போய் விட்டது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வெற்றிகரமாக நடித்த முடித்தார் ஸ்டாலின். அதேவேகத்தில் கோர்ட்டிலும் ஆஜராகி தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குறுக்கு விசாரணையில் ஆஜராகி மின்னல் வேகத்தில் பதிலளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் அனைத்துக் கூட்சிக் கூட்டம் ஒன்றை திமுக கூட்டியிருந்தது. இதில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. மற்ற அனைத்துக் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

Stalin appears in Madras HC

ஆளுங்கட்சியான அதிமுக எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்த முன்வராத நிலையில் திமுக நடத்திய இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட பெரிய வெற்றிதான்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜரானார் ஸ்டாலின். 2011 சட்டசபைத் தேர்தலில் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி ஸ்டாலின் ஆஜரானார்.

அப்போது ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. வாக்கு சேகரிக்க எத்தனை முறை தொகுதிக்குச் சென்றீர்கள் என்ற கேள்விக்கு 4 முறை என்று பதிலளித்தார் ஸ்டாலின். அப்போது ஆரத்தி எடுத்தார்களா என்ற கேள்விக்கு, தமிழ்க் கலாச்சாரத்தில் ஆரத்தி எடுப்பது வழக்கம், எடுத்தார்கள் என்றார்.

வாக்கு சேகரிக்கப் போகும் அங்கு பட்டாசு வெடித்தார்களா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலைக் கூறினார் ஸ்டாலின். உங்களது பிரசாரக் குழுவின் தலைமைப் அலுவலகம் எங்கு இருந்தது என்ற கேள்விக்கு ஞாபகம் இல்லை என்பது ஸ்டாலின் பதிலளித்தார். எத்தனை தேர்தல் பிரசார அலுவலகங்கள் இருந்தன என்ற கேள்விக்கு எங்கு தேவைப்பட்டதோ அங்கெல்லாம் வைத்தோம் என்றார்.

கொளத்தூர் போகும்போது என்ன ஏற்பாடு செய்தார்கள் என்ற கேள்விக்கு, திறந்த ஜீப்பில் போவேன். மக்கள் மட்டும் கூடியிருப்பார்கள். வாக்கு சேகரிக்கும்போது மேளதாளம் இருக்காது. உடன் போலீசார், பத்திரிகையாளர்கள் வருவார்கள் என்றார் ஸ்டாலின்.

கொளத்தூர் தொகுதியில் தங்கி பிரச்சாரம் செய்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார் ஸ்டாலின்.

English summary
DMK leader M K Stalin appeared in Madras HC in a case sued by ADMK's Kolathur candidate Saidai Duraisamy today. He replied to the questions posed by the Judge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X