• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Breaking News:நாமக்கல் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஸ்டாலின் திடீர் கண்டன பேரணி

|

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கறுப்புக் கொடி காட்டிய நாமக்கல் திமுகவினர் 192 பேரை சிறையில் அடைத்ததைக் கண்டித்து சென்னையில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியின் முடிவில் பேசிய ஸ்டாலின், மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இன்றைய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் படிக்கலாம்:

Newest First Oldest First
5:18 PM, 23 Jun
சென்னையில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுதலை

ஆய்வுப் பணியை ஆளுநர் தொடர்ந்தால் திமுக போராட்டம் தொடரும்

விடுவிக்கப்பட்ட பின்னர் ஸ்டாலின் பேட்டி

தீவிரமான திமுகவின் போராட்டம் இரவோ நாளையோ கூட இருக்கும்- ஸ்டாலின்

4:34 PM, 23 Jun
மனசாட்சிபடிதான் தீர்ப்பு வழங்குகிறோம்: ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்கள் பற்றி இந்திரா பானர்ஜி ஆதங்கம்

1:48 PM, 23 Jun
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் திடீர் ரிசார்ட் விசிட்டால் பரபரப்பு
1:05 PM, 23 Jun
ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம்: முதல்வர் கோரிக்கை

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதல்வர் கடிதம்

உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையங்களை அமைக்க முதல்வர் கோரிக்கை

12:28 PM, 23 Jun
காவிரி மேலாண்மை ஆணையம்- குமாரசாமி கண்டனம்

கர்நாடகா பிரதிநிதியை மத்திய அரசு நியமித்ததற்கு கண்டனம்

12:12 PM, 23 Jun
முல்லைத் தீவில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடிகளுடன் ஒருவர் கைது
12:11 PM, 23 Jun
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

12:11 PM, 23 Jun
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்

கடல் காற்று அதிகமாக வீசும் என்பதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

12:02 PM, 23 Jun
ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை சிறையில் அடைக்க எச். ராஜா வலியுறுத்தல்
11:08 AM, 23 Jun
சேலம்- சென்னை 8 வழி சாலைக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளுடன் பங்கேற்பு

11:06 AM, 23 Jun
சேலம்- சென்னை 8 வழி சாலைக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளுடன் பங்கேற்பு

11:00 AM, 23 Jun
அரூர் அருகே நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயி தீக்குளிக்க முயற்சி

மஞ்சவாடி, நடுப்பட்டியில் நிலம் எடுக்க எதிர்ப்பு

10:48 AM, 23 Jun
மத்திய அரசின் ஏஜென்ட்டாக ஆளுநர் செயல்படுகிறார்-ஸ்டாலின் பேட்டி

துவக்கம் முதலே திமுக ஆளுநரின் ஆய்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறது

ஆளுநர் தனது தவறை தொடர்ந்து செய்துகொண்டுள்ளார்- ஸ்டாலின்

10:37 AM, 23 Jun
சென்னை ஆளுநர் மாளிகை அருகே ஸ்டாலின் கைது

திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது

10:09 AM, 23 Jun
ராமநாதபுரத்தில் குடிசை வீட்டிற்கு மாத மின்கட்டணம் ரூ.58,000 வந்ததால் மக்கள் அதிர்ச்சி

10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்அளவீட்டில் குளறுபடி என புகார்

ரூ.58,000 மின்கட்டணம் குறித்து புகாரளித்தும் மின்வாரியம் விளக்கம் தரவில்லை என மக்கள் புகார்

10:09 AM, 23 Jun
திருப்பதியில் மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டும் பணிகள்?

மடப்பள்ளியில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடந்தது என திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு

மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டியதாக முன்னாள் கோயில் அர்ச்சகர் புகாரால் பரபரப்பு

10:08 AM, 23 Jun
சென்னையில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி

உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

10:08 AM, 23 Jun
கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

பாஜக நிர்வாகி அன்வர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை

10:08 AM, 23 Jun
சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

10:08 AM, 23 Jun
எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜக பலத்தை வெல்ல முடியாது- தமிழிசை

தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டமும் வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் குறியாக உள்ளார்- தமிழிசை

10:08 AM, 23 Jun
திமுகவால் கொண்டு வர முடியாத எய்ம்ஸ் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது

மாநில ஆளுநரை அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிக்கிறார்கள்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

10:07 AM, 23 Jun
ஆளுநர் கார் மீது கறுப்புக்கொடி வீசிய சம்பவத்தில் திமுகவினர் 192 பேர் சேலம் சிறையில் அடைப்பு நாமக்கல்லில் ஆளுநர் பன்வாரிலால் கார் மீது திமுகவினர் நேற்று கறுப்புக்கொடி வீசினர்

10:07 AM, 23 Jun
ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் - திண்டுக்கல் சீனிவாசன்

ஆனால் ஸ்டாலினால் ஆட்சியை கலைக்க முடியவில்லை - திண்டுக்கல் சீனிவாசன்

முதல்வர், துணை முதல்வருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்ததில்லை - திண்டுக்கல் சீனிவாசன்

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here are the Tamilnadu today Flash news.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more