For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட்டை எதிர்க்க பாஜக அல்லாத 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பாரதிய ஜனதா கட்சி அல்லாத 6 மாநில முதல்வர்கள் இணைந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட்டை எதிர்க்க 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை- வீடியோ

    சென்னை: பாரதிய ஜனதா கட்சி அல்லாத 6 மாநில முதல்வர்கள் இணைந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    நேற்று நீட் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகம் மிகவும் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     Stalin calls Non-BJP ruling states to oppose NEET exam together

    இந்த பிரச்சனை முடிவதற்குள், இன்று நீட் தேர்வு முடிவு காரணமாக பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ கல்லூரியில் சேர முடியாது என்பதால் அவர் பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால் மீண்டும் நீட்டிற்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

    பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து நீட்டை எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

    நீட் தேர்வை எதிர்க்கும் 6 மாநில முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி ஆகிய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

    கிராம, ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வால் பாதகம் ஏற்பட்டுள்ளது. இந்தியை தாய் மொழியாக கொள்ளாத மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்கள் நீட்டை எதிர்க்க ஒன்று சேர வேண்டும். இந்த சமத்துவமற்ற தேர்வை எல்லோரும் ஒன்றாக எதிர்க்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Stalin calls Non-BJP ruling states to oppose NEET exam together . Stalin tweets, ''I urge the Chief Ministers @CMOKerala @CMofKarnataka @TelanganaCMO @AndhraPradeshCM @CMPuducherry @MamataOfficial to oppose the NEET exam as it puts rural and economically weaker students at a fundamental disadvantage. The discrepancies in the translated NEET question papers have discriminated against non-Hindi speaking students. I urge all Chief Ministers of non-BJP ruling States to join together in opposing this unfair test on this ground also, on Neet issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X