For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது.. ஸ்டாலின் சீண்டல்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நடைபெறும் மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. வரும் 24ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.

இந்நிலையில் 9 ஆம் நாளான நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு காவிரியாற்றில் புனித நீராடினார்.

டிடிவி தினகரன் விமர்சனம்

டிடிவி தினகரன் விமர்சனம்

அவருடன் அமைச்சர் ஓஎஸ் மணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனித நீராடியது குறித்து ஏற்கனவே டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார்.

நதிதான் மாசுபடும்

நதிதான் மாசுபடும்

துரோகத்தை போக்க எடப்பாடி பழனிச்சாமி எந்த நதியில் குளித்தாலும் பாவம் போகாது என்றார். பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார்.

ஸ்டாலினும் விமர்சனம்

ஸ்டாலினும் விமர்சனம்


இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியின் புனித நீராடலை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மேலும் தான் செய்த பாவத்தை நீக்குவதாக நினைத்து முதல்வர் பழனிசாமி குளத்தில் மூழ்கினார்.

குளத்திற்கு பாவம்

குளத்திற்கு பாவம்

ஆனால், அவர் நீரில் மூழ்கி குளத்திற்கு பாவத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

English summary
DMK working president Stalin criticizing Edappadi palanisami holy water. He said after Edappadi palanisami holy bath the river became sin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X