• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் .. சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

By Mohan Prabhaharan
|
  காவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ

  சென்னை : ஐ.டி துறையில் பணிபுரியும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

  கடந்த நான்கு நாட்களுக்கு முன் சென்னை நாவலூர் பகுதியில், ஐ.டி பெண் ஊழியர் ஒருவரை கடுமையாகத் தாக்கி அவரது உடமைகளை கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இந்த விவகாரத்தில் கொள்ளையர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

   காவல்துறைக்கு சவால்

  காவல்துறைக்கு சவால்

  மேலும் அந்த அறிக்கையில், சென்னை, நாவலூர் பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடூரமாகத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள கயவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்கும் மேலாக ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ள அவரிடமிருந்து நகைகள், ஸ்கூட்டி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் இரக்கமே இல்லாமல் அவரை முட்புதருக்குள் வீசிச்சென்றுள்ள அந்தக் காட்டுமிராண்டிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, சென்னை மாநகர காவல்துறையின் திறமைக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

   பொதுமக்களுக்கு பீதி

  பொதுமக்களுக்கு பீதி

  கடந்த 2014-ம் ஆண்டு, சிறுசேரி ஐ.டி. பார்க்கில் பணியாற்றிய உமாமகேஸ்வரி என்ற மென்பொறியாளர், நள்ளிரவுப்பணி முடிந்து திரும்பும் போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தற்போது, மீண்டும் ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள படுபயங்கர சம்பவம், பாதுகாப்பற்ற மாநகரமாக சென்னை மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடையே ஏற்படுத்தியுள்ளது.

   காவல்துறையின் அலட்சியமா ?

  காவல்துறையின் அலட்சியமா ?

  இதுபோன்ற, ஐ.டி. நிறுவனங்கள் அதிகமுள்ள சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது இல்லை. மேலும், ஐ.டி. நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க முன் வருவதில்லை. இதுபற்றி, மாநகர காவல்துறை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை. காவல்துறையில் இரவு ரோந்து உள்ளிட்ட குற்றத்தடுப்பு பணிகள் இப்போது முறையாக நடக்கின்றதா? அப்படி நடக்கிறது என்றால் மீண்டும் ஒரு இளம் பெண்ணுக்கு இப்படியொரு அதிபயங்கரம் அரங்கேறியது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

   மிகுந்த வேதனை அளிக்கிறது

  மிகுந்த வேதனை அளிக்கிறது

  பெண்கள் பாதுகாப்பிற்காக ஹெல்ப் லைன் தொடங்கியது பற்றியெல்லாம் ஏட்டளவில் பல்வேறு பிரசாரங்கள் நடக்கிறதே தவிர, முதலமைச்சருக்கு பந்தா காட்டுவதற்காக, சாலையில் வரிசையாக பாதுகாப்பிற்கு நிறுத்துவதற்கும், அமைச்சர்கள் விழாக் கொண்டாட்டங்களுக்கு அளவு கடந்த எண்ணிக்கையில் காவலர்களை அனுப்புவதற்கும்தான் உயரதிகாரிகளுக்கு விருப்பம் இருக்கிறதே தவிர, இதுபோன்ற ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

   செயின் பறிப்பு சம்பங்கள்

  செயின் பறிப்பு சம்பங்கள்

  பெண்களுக்கு எதிரான வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து, உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏராளமான ரவுடிகள் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா கொண்டாடும் நிலை உருவாகி இருக்கிறது. அதேபோல, குன்றத்தூரில் பட்டப்பகலில் கணவருடன் நடந்துசென்ற மனைவியின் செயின் அறுக்கப்பட்டதும், அந்தப்பெண் நிலை குலைந்து சரிந்துவிழுந்த காட்சியும் பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   முழுப்பாதுக்காப்பு தேவை

  முழுப்பாதுக்காப்பு தேவை

  அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேடுகள் தான் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு சம்பவங்களுக்கும் காரணமாக மாறியிருக்கிறது. ஆகவே, ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்க வேண்டும். மேலும், ஐ.டி. நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 24 மணி நேர ரோந்துப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

   அரசு விரைவாகச் செயல்படவேண்டும்

  அரசு விரைவாகச் செயல்படவேண்டும்

  ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை, வேறு பகுதிகளுக்கு பந்தோபஸ்து பணியின் நிமித்தம் அழைக்கக்கூடாது என்றும், மனிதநேயமற்ற, மிருகத்தனமான தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, அந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் நடத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Stalin requests that IT Women to be ensured . DMK Leader MK Stalin mentioned that both TN Government and Police should act fast on the IT Women attack issue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more