For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தை பொங்கலும் வந்தது... ஸ்டாலின் துர்கா ஸ்டாலின் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் களை கட்டியது சமத்துவ பொங்கல். ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பங்கேற்று பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் பங்கேற்று சிறப்பித்தார்.

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. திமுகவினர் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

    ஆதனூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆரத்தி வரவேற்பு

    ஆரத்தி வரவேற்பு

    ஸ்டாலினுக்கும் துர்கா ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என களைகட்டியது பொங்கல் விழா. ஆட்டம் பாட்டம் என அமர்களப்பட்டது சமத்துவ பொங்கல்.

    தை பொங்கல் திருநாள்

    தை பொங்கல் திருநாள்

    திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். பொங்கல் பொங்கும் போது திமுகவினர் உற்சாக முழக்கமிட்டனர். பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார் ஸ்டாலின்.

    தமிழ் புத்தாண்டு

    தமிழ் புத்தாண்டு

    நிகழ்ச்சியில் பேசிய மு.க ஸ்டாலின் தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
    தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டம் இயற்றப்படும்.

    வன்முறையை தூண்டுவதா?

    வன்முறையை தூண்டுவதா?

    தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தரம் தாழ்ந்து, கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டுமே இருக்க முடியும். அதைவிடுத்து, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் நம் மண்ணில் இடமில்லை.

    அரசின் கவலை

    அரசின் கவலை

    ஆட்சியில் தொடர்ந்து எப்படி இருப்பது என்பதுதான் அதிமுக அரசின் கவலையாக உள்ளது. மக்களின் பிரச்னைகள் குறித்து அவர்களுக்கு துளியும் வருத்தம் இல்லை. மிக விரைவில் சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் என்று கூறினார் ஸ்டாலின்.

    English summary
    DMK working president MK Stalin celebrated Samathuva Pongal with his wife and cadres in Aathanur village in Kanchipuram district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X