For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியை ஓரம்கட்டிய ஸ்டாலின்.. கட்சியை பெரு நிறுவனம் போல் நடத்துவதாக அழகிரி புகார்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மதுரை: கருணாநிதியை ஓரம்கட்டி கட்சியை பெரு நிறுவனம் போல் ஸ்டாலின் நடத்தி வருவதாக அழகிரி குற்றம்சாட்டினார்.

அழகிரி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடத்திய அமைதி பேரணி குறித்து ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் அழகிரி. அப்போது அவர் கூறுகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வேட்பாளர் தேர்வில் கருணாநிதியை ஓரம்கட்டிய ஸ்டாலின் ஏராளமான முடிவுகளை எடுத்தார்.

Stalin is ruling DMK like corporate house,says Alagiri

நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சியுடன் தொடர்பில்லாதவர்கள் போட்டியிட்டனர். எடுத்துக்காட்டாக ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியுடன் தொடர்பில்லாதவர்கள்.

இவற்றை முடிவு செய்தது ஸ்டாலின். அதுபோல் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதும் கருணாநிதியால் பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களாகவே தேர்வு செய்தனர். இதனால் தேர்தலில் அவர்கள் தோற்றனர். இதனால் கருணாநிதி வருத்தமடைந்தார்.

தொண்டர்கள் விரக்தி அடைவதற்கு முக்கிய காரணமே கட்சியை அரசியல் கட்சியாக நடத்தாமல் பெரு நிறுவனம் போல் நடத்துகிறார் ஸ்டாலின். இதனால் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படுகிறது.இதுபோன்று ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இவையெல்லாம் சந்தர்ப்பம் வரும் போது வெளிப்படுத்துவேன் என்றார் அழகிரி.

English summary
MK Alagiri says that DMK party is being run like a corporate house. Party should be run like a political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X