For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளிக்கே பாதுகாப்பில்ல.. மர்ம மரணங்களுக்கு காரணம் யார்.. ஸ்டாலின் கேள்வி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பில்லை. அவருடைய நண்பர்களுக்குக்கும் பாதுகாப்பில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். முன்னாள் முதல்வரின் எஸ்டேட்டுக்கு பாதுகாப்பளித்தவரின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொட நாடு எஸ்டேஸ் காவலாளியை மர்ம நபர்கள் சிலர், அடித்து கொலை செய்து விட்டு ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக போலீசார் தீவிரமான தேடிவந்தனர். அந்த நேரம் பார்த்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் திடீரென சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

சாலை விபத்து

சாலை விபத்து

அதே நாளில் கனகராஜின் நண்பரான சயான் என்பவருக்கும் சாலை விபத்து ஏற்பட்டது. இதில் அவரது மனைவி மற்றும் குழந்தை மரணம் அடைந்தனர். நினைவிழந்த நிலையில் சயான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சற்று நினைவு திரும்பியுள்ள சயான் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளார்.

கேள்வி

கேள்வி

தொடர்ந்து இதுபோன்று நடக்கும் மர்ம மரணங்கள் மற்றும் மர்ம சாலை விபத்துக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மர்ம விபத்துகள்

மர்ம விபத்துகள்

இதுகுறித்து ஸ்டாலின், "முதல்வர் குடியிருந்த ‘கொடநாடு எஸ்டேட்' காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது மட்டுமல்ல. அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் குற்றவாளிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

மாலுமி இல்லாக் கப்பல்

மாலுமி இல்லாக் கப்பல்

மேலும், கொடநாடு கொலை தொடர்பானர்கள் என்று தேடப்படும் அனைவருக்கும் அடுத்தடுத்து நடக்கும் மர்ம விபத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திறமைமிக்க தமிழக காவல்துறை "மாலுமி" இல்லாத கப்பல் போல இன்றைக்கு தரைதட்டி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்று ஸ்டாலின் காவல்துறையை விமர்சனம் செய்துள்ளார்.

English summary
The opposition leader M K Stalin has questioned about mystery murders in TN, especially in Kodanad murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X