For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகி புயல் பாதிப்புக்காக மத்திய அரசிடம் கேட்ட நிவாரணம் என்ன ஆனது? சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி!

ஓகி புயல் பாதிப்புக்காக மத்திய அரசிடம் கேட்ட நிவாரணம் என்ன ஆனது என சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஓகி புயல் பாதிப்புக்காக மத்திய அரசிடம் கேட்ட நிவாரணம் என்ன ஆனது என சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் ஓகி புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Stalin raising questions in Assembly about Ockhi cyclone

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவை நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்றது.

அப்போது ஓகி புயல் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். ஓகி புயலால் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

ஓகி புயலால் எத்தனை மீனவர்கள் மாயமானார்கள் என்ற தகவல் அரசிடம் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஓகி புயல் பாதிப்புக்காக மத்திய அரசிடம் கேட்ட நிவாரணம் என்ன ஆனது? என்றும் ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ஆளுநர் உரையில் ஏன் கேட்கவில்லை? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

English summary
Stalin raising questions in Assembly about Ockhi cyclone. Stalin accusing that tamilnadu govt did not have the details about missing fisherman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X