• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: திமுக தலைவரானார் ஸ்டாலின்.. தலைவர்கள் வாழ்த்து

By Lakshmi Priya
|

சென்னை: திமுகவின் பொதுக் குழு இன்று பொதுச் செயலாளர் க.. அன்பழகன் தலைமையில் கூடி அதில் கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Stalin reaches Anna Arivalayam Live Updates

புதிய தலைவர் மற்றும் பொருளாளரை வாழ்த்தி திமுக முன்னணியில் பேசினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Newest First Oldest First
1:50 PM, 28 Aug
அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் விஜயம்

அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி

மலர் வளையம் வைத்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரைமுருகனும் அஞ்சலி

1:23 PM, 28 Aug
கருணாநிதி இல்லாத மேடையை கனவில் கூட நாம் கண்டது கிடையாது-ஸ்டாலின்

50 ஆண்டுகால வரலாற்றை எனது சிறு இதயத்திடம் தந்துவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டார்

எனது இதயம் அவர் தந்தது, அது அண்ணாவிடம் இரவலாக வாங்கியது-ஸ்டாலின்

எனது இறுதி இதய துடிப்பு இருக்கும்வரை, இறுதி மூச்சு இருக்கும்வரை உனக்காக போராடுவேன்-ஸ்டாலின்

கண் கலங்கியபடி பேசினார் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் நெகிழ்ச்சி உரையுடன் திமுக பொதுக்குழு கூட்டம் நிறைவுற்றது

1:21 PM, 28 Aug
இனி நீங்கள்தான் எனது குடும்பம்-ஸ்டாலின்

கட்சி நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தலைமைக்கு அனைவரும் ஒன்றுதான்-ஸ்டாலின்

திமுகவில் நானும் ஒரு தொண்டன்தான், இங்கே அனைவரும் ஒன்றுதான்-ஸ்டாலின்

யார் பெரியவர் என்ற சுயநல போக்குடன் இருக்க கூடாது-ஸ்டாலின்

கழக தோழர்களே, இது காலத்தின் பேரழைப்பு-ஸ்டாலின்

1:20 PM, 28 Aug
இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல, தீயை தாண்டுவதற்கு-ஸ்டாலின்

ஓடுவோம், ஓடுவோம், வாழ்க்கை நெறிமுறைகளின் ஓரத்திற்கே ஓடுவோம்-ஸ்டாலின்

நமது சொந்த நலன்களை மறந்து தமிழக நலனுக்காக உழைப்போம்

பெரியார் கற்றுத்தந்த சமத்துவத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை-ஸ்டாலின்

1:18 PM, 28 Aug
நான் ஒரு கனவு கண்டுள்ளேன்-ஸ்டாலின் விவரிப்பு

இன்று நீங்கள் கேட்கும், பார்க்கும் மு.க.ஸ்டாலினாக நான் புதிதாக பிறக்கிறேன், இது வேறு ஒரு நான்

திராவிட மரபணுவுடன், கனவுகளை நிறைவேற்ற நான் புதிதாக பிறந்துள்ளேன்--ஸ்டாலின்

1:18 PM, 28 Aug
என்னோடு பிறந்துள்ள கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்-ஸ்டாலின்

இது புதிய நாம்.. அந்த அழகான எதிர்காலத்தில் கழகத்தினர் உள்ளனர்-ஸ்டாலின்

தன் ஜாதியை பெரிதாக நினைப்போர் அல்ல, அனைவரையும் உடன்பிறப்பாக நினைப்போர்-ஸ்டாலின்

பகுத்தறிவு எனும் அறிவு கொண்டு, ஆணும் பெண்ணும் இங்கு சமம் என்று மதித்தல் -ஸ்டாலின்

1:18 PM, 28 Aug
திருநங்கைகள், மாற்று திறனாளிகளுக்கு சம உரிமை பெற்று கொடுத்தல் -ஸ்டாலின்

ஊடகங்கள் மற்றும் தனிமனித கருத்து சுதந்திரத்தை மீட்பது

பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதசாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல்-ஸ்டாலின்

இதுதான் எனது கனவுகள், இந்த நொடி முதல் மெய்ப்பிக்க போகிறது-ஸ்டாலின்

1:18 PM, 28 Aug
இந்த கனவுகளை நிறைவேற்ற துடித்துக்கொண்டுள்ளேன், நீங்கள் இல்லாமல் இந்த பெருங்கனவை நிறைவேற்ற முடியாது

இது எனது கனவு மட்டுமல்ல, தமிழகத்தின் கனவு, வா, என்னோடு கைகோர்க்க வா-ஸ்டாலின்

வா.. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா

முதுகெலும்பு இல்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா

அழகான எதிர்காலத்தை மெய்ப்பிப்போம், நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம் என்று அழைக்கிறேன்-ஸ்டாலின்

1:12 PM, 28 Aug
தமிழக மக்களின் நலன்களை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது அண்ணா பெயரில் உள்ள கட்சி

பகல் கொள்ளையடித்துக் கொண்டுள்ளார்கள்- ஸ்டாலின்

தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிக்க வேண்டியதே நமது முதல் பணி-ஸ்டாலின்

தமிழகத்திலுள்ள இன்றைய ஆட்சி அவலத்தில் உள்ளது

இதை நினைக்கும்போது, நெஞ்சு பொறுக்குதில்லையே, அஞ்சி அஞ்சி சாவார் என்ற பாரதி வரி நினைவிற்கு வருகிறது

நாம் யார், நமது கொள்கைகள் என்ன, நமக்குள் இருக்கும் குறைகள், காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது என்ன-ஸ்டாலின்

1:11 PM, 28 Aug
எனது வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர்கள் நீங்கள்-ஸ்டாலின்

கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்பதிலேயே மகிழ்ச்சி

புதிய வரலாறை நோக்கி தமிழகத்தையும், கழகத்தையும் அழைத்து செல்ல விரும்புகிறேன்

சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்பதே திமுகவின் 4 தூண்கள்--ஸ்டாலின்

சுயமரியாதை எனும் முதுகெலும்பு இல்லாத மாநில அரசு தமிழகத்தில் உள்ளது- ஸ்டாலின்

மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது

1:07 PM, 28 Aug
திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை

அப்பா இல்லாவிட்டாலும் எனது பெரியப்பா பேராசிரியர் க.அன்பழகன் உள்ளார்- மு.க.ஸ்டாலின்

12:59 PM, 28 Aug
சென்டிமென்ட்டாக கருணாநிதி வகித்த பதவி பொருளாளர் பதவி - துரைமுருகன்
12:58 PM, 28 Aug
கலைஞர் வகித்த பொறுப்பு பொருளாளர் பதவி -துரைமுருகன்

எம்ஜிஆர், பேராசிரியர், ஸ்டாலின், ஆற்காடு வகித்த பொறுப்பு இது - துரைமுருகன்

12:57 PM, 28 Aug
தலைவன் இல்லாமல் போனாலும் அவர் விட்ட விழுது நீங்கள் இருக்கிறீர்கள் - ஸ்டாலினுக்கு துரைமுருகன் புகழாரம்
12:54 PM, 28 Aug
நூற்றாண்டு இயக்கத்தை வழி நடத்தப் போகிற அடுத்த கட்டம் ஸ்டாலினிடம் வந்துள்ளது - துரைமுருகன்

நீங்கள் ஒரு சரித்திர புருஷன்.. வரலாற்றில் இடம் பெறப் போகிற தலைவர் நீங்கள் - துரைமுருகன்

இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது - துரைமுருகன்

12:54 PM, 28 Aug
திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய இயக்கம் - துரைமுருகன்

கருணாநிதி பொறுப்பை ஏற்றபோது அவரோடு நான் இருந்தேன் - துரைமுருகன்

கருணாநிதி சிலுவையைச் சுமந்து வந்து பொறுப்பை ஏற்றார் - துரைமுருகன்

ஏராளமான எதிர்ப்பை ஏற்று பதவிக்கு வந்தார் கருணாநிதி - துரைமுருகன்

12:54 PM, 28 Aug
ஆனால் ஸ்டாலின் ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் மனக்குறை இல்லாமல் பதவிக்கு வந்துள்ளார் -துரைமுருகன்

அந்தக் கட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.. இதையும் நினைத்துப் பார்க்கிறேன் - துரைமுருகன்

உன்னோடும், உன் தந்தையோடும் நடந்து வந்துள்ளேன் - துரைமுருகன்

நான் அண்ணாவோடு அரசியல் நடத்தியவர், கலைஞரோடு பழகியவன் - துரைமுருகன்

எத்தனையோ பதவிகளை திமுகவில் ஏற்றுள்ளேன் - துரைமுருகன்

ஆனால் நான் கழகத்தின் பேச்சாளன் என்பதில்தான் எனக்குப் பெருமை - துரைமுருகன்

12:52 PM, 28 Aug
பொருளாளர் தகுதிக்கு என்னை உயர்த்தி வைத்துள்ளீர்கள் - துரைமுருகன்

அதற்கு நான் தகுதி உடையவனாக கருதவில்லை - துரைமுருகன்

ஆனால் நீங்கள் என்னை உயர்த்தியுள்ளதால் அதற்குரியவனாக நான் திகழ்வேன் - துரைமுருகன்

என் தலைவர் படுத்திருக்கிற திக்கு நோக்கி வணங்கி எனது பொறுப்பை ஏற்கிறேன் - துரைமுருகன்

12:48 PM, 28 Aug
இப்போது பேச எனக்கு வார்த்தை வரவில்லை - துரைமுருகன்

எனது கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.. எனது இதயச்சுமை இறங்கவில்லை - துரைமுருகன்

12:47 PM, 28 Aug
இப்படி நான் அழைப்பதற்கு இத்தனை நாள் வாழ்ந்தேனே அது போதும் -துரைமுருகன்

நான் உங்கள் வீட்டிற்கு வந்தபோது நீங்கள் குட்டிப் பையன் - துரைமுருகன்

வளர்ந்து தோழனாகி இன்று தலைக்கு மேல் வளர்ந்து தலைவனாகி விட்டீர்கள் -- துரைமுருகன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி உள்ளார்ந்த மகிழ்ச்சி - துரைமுருகன்

12:46 PM, 28 Aug
மரியாதைக்குரிய என் தலைவர் மு.க.ஸ்டாலின் - துரைமுருகன் பேச்சு
12:27 PM, 28 Aug
ஒரு தலைவனாக இன்று நிமிர்ந்து நின்றிருக்கிறீர்கள் - கனிமொழி

எங்களைப் போல ஸ்டாலின் உணர்ச்சிவசப்படவில்லை -கனிமொழி

அவர் கோபப்பட்டிருந்தால் தமிழகம் பின்னால் வந்திருக்கும் -கனிமொழி

இளைஞர் பட்டாளம் ஸ்டாலின் பின்னால் வந்திருக்கும் - கனிமொழி

ஆனால் எத்தனை பாதிப்பு வந்திருக்கும், துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கும் - கனிமொழி

ஆனால் இதையெல்லாம் தவிர்த்து தலைவனாக உயர்ந்து நின்றார் ஸ்டாலின் -கனிமொழி உங்களில் ஒருவராக அவரை எழுந்து வா தலைவா என்று கூறி வணங்குகிறேன் - கனிமொழி

12:26 PM, 28 Aug
இடமில்லை என்ற அறிக்கைதான் இடியாக வந்தது - கனிமொழி

தமிழர்களின் மனதில் அது இடியாக இறங்கியது - கனிமொழி

நாங்கள் அனைவரும் துடித்துப் போனோம் - கனிமொழி

அனைவரும் மெரினாவில் போய் உட்காருவோம் என்றுதான் நாங்கள் சொன்னோம் - கனிமொழி

ஆனால் ஸ்டாலின் அமைதி காத்தார்.. வக்கீல்களோடு கலந்து பேசினார் - கனிமொழி

அடுத்த நாள் சாதகமாக தீர்ப்பு வந்தபோது அங்கேயே உடைந்து அழுதார் - கனிமொழி

12:24 PM, 28 Aug
எங்கள் அப்பாவிற்கு ஒரே ஒரு ஆசைதான் இருந்தது - கனிமொழி

தன் தலைவனிடம் சென்று அருகிலே அடைக்கலம் செய்யப்பட வேண்டும் என்பதே அந்த ஆசை - கனிமொழி

அந்த ஆசையை நிறைவேற்ற முடியுமா என்ற கவலை மட்டுமே ஸ்டாலினுக்கு இருந்தது - கனிமொழி

எத்தனையோ பேரைத் தொடர்பு கொண்டு அவர் பேசினார் - கனிமொழி

தனது தந்தையின் மரணத்திற்காகக் கூட ஸ்டாலினை அழ விடவில்லை இந்த அதிமுக அரசு - கனிமொழி

12:24 PM, 28 Aug
கட்சிக்கு முன் நாம் எதுவும் இல்லை - கனிமொழி

ஒரு முகமறியா முதல்வர் முன்பு போய் நின்றார் ஸ்டாலின் - கனிமொழி

பிரதமர்களையெல்லாம் உருவாக்கிய தலைவருக்காக அவர்கள் முன்பு போய் நின்றார் - கனிமொழி

உங்களால் முடியும் என்று நா தழுதழுக்க கேட்டார் ஸ்டாலின் - கனிமொழி

12:21 PM, 28 Aug
இவர் என் தலைவர், இவரைப் பெற்றிருப்பதற்கு எத்தனை பேறு பெற்றிருக்கிறேன் என்று நெகிழ்கிறேன் - கனிமொழி
12:20 PM, 28 Aug
திமுகவின் வழி நடத்தக் கூடியவராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி என்பதில் சந்தேகம் இல்லை - கனிமொழி

யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை - கனிமொழி

தலைவர் பதவி பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பது சடங்குதான் - கனிமொழி

கட்சியின் சட்டங்கள் கேட்கக் கூடிய நிகழ்வு - கனிமொழி

மனதில் முகத்தில் புன்னகையை புகட்டக்கூடிய வாய்ப்பை இந்த நாள் கொடுத்திருக்கிறது - கனிமொழி

12:18 PM, 28 Aug
மகளிர் அணியை பொருளாதார ரீதியில் பலமாக்க துரைமுருகனுக்கு கனிமொழி கோரிக்கை
12:17 PM, 28 Aug
உச்சி சூரியனை இயற்கை பறித்துக் கொண்டது - கனிமொழி

இருள்மை கவிழ்ந்தது.. திசையறியா காட்டில் தமிழ் இனமே நின்று கொண்டிருந்தது - கனிமொழி

கிழக்குச் சூரியனாக இப்போது உதித்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின் - கனிமொழி

12:11 PM, 28 Aug
தமிழ்நாட்டில் இனி வெற்றிடம் இல்லை - திருச்சி சிவா

ஸ்டாலின் தலைவர் என்பது புளகாங்கிதம், மகிழ்ச்சி, சந்தோஷம் - திருச்சி சிவா

ஓர் நாள் இரவிலே தலைவராகவில்லை - திருச்சி சிவா

ஏணியில்தான் வந்தார்.. அது நூலேறி, மர ஏறி அல்ல - திருச்சி சிவா

சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்தவர் ஸ்டாலின் - திருச்சி சிவா

READ MORE

 
 
 
English summary
DMK General Council Meeting Live Updates. Stalin is going to be elevated as President of DMK after demise of Karunanidhi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X