For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரம்.. மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. ஸ்டாலின்

காவிரி விவகாரம்.. மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி: ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவிரி பிரச்னையில் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது.

நீரும் தடைபட்டுள்ளது

நீரும் தடைபட்டுள்ளது

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வாய்மொழி உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீர் கிடைக்கவில்லை காவிரி மேலாண்மை வாரியம் அமையாததால் மாதந்தோறும் வரவேண்டிய நீரும் தடைபட்டு உள்ளது.

நிதி வழங்குவதில் தாமதம்

நிதி வழங்குவதில் தாமதம்

கர்நாடகம் 4 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு தருமாறு மத்திய அரசும் அறிவுறுத்தவில்லை. கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்திற்காக தமிழகத்தின் உரிமையில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியளிக்கிறது

அதிர்ச்சியளிக்கிறது

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கிறது. நீதிமன்றம் அவகாசம் தந்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

அரசு துரோகம் செய்துவிட்டது

அரசு துரோகம் செய்துவிட்டது

தற்போதைய நிலை நீதித்துறை வரலாற்றில் நிச்சயம் இடம் பெற்றிருக்க கூடாது. காவிரி விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக அரசுக்கு துணை போவதின் மூலம் அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது. இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Stalin reaction on cauvery issue. Stalin says Supreme court giving time for central govt in the Cauvery issue is shocking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X