For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மு.க. ஸ்டாலினுக்கு ரூ. 4 கோடி சொத்து... வேட்புமனுவில் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் தனக்கு ரூ. 4 கோடி சொத்து இருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இதையொட்டி, அயனாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கார்த்திகாவிடம் இன்று மதியம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

Stalin's asset detail

தனது வேட்புமனுவில் ஸ்டாலின் தனக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது, தனது சொத்து மதிப்பு ரூ.4,13,83,988 எனக் கூறியுள்ள ஸ்டாலின், அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.80,33,242 எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3,33,50,746 எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு 1.50 கோடியாக இருந்த ஸ்டாலினின் சொத்து மதிப்பு, கடந்த 2011ம் ஆண்டு 2.11 கோடியாக உயர்ந்தது. தற்போது அது ரூ. 4 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK treasurer Stalin on wednusday declared assets worth Ras. 4 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X