செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே இனி பேச வேண்டாம் - .ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே இனி யாரும் தயவு செய்து பேச வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்வதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மதுராந்தகம் செய்யூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் (40). இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவர்களில் 3-வது மகன் தனுஷ் (9). 4-ம் வகுப்பு படித்து வரும் தனுஷ், கடந்த சில தினங்களுக்கு முன் சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியுள்ளார்.

மின் இணைப்பை துண்டிக்காமல் செல்போனை இயக்கி அவர் பேசியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதில் சிறுவனின் வலது கை மற்றும் 2 கண்களில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து ஓடிவந்த வெண்ணிலா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு வரப்பட்ட சிறுவனுக்கு, வலது கையில் ஏற்பட்ட தீக்காயத்துக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனின் 2 கண்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் டாக்டர்களின் பரிந்துரைப்படி தனுஷ் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தொடர்ந்து அவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த சிறுவனனை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து நலன் விசாரித்தார். சிறுவனை சந்தித்த பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியபோது அந்த செல்போன் வெடித்ததில் 9 வயது சிறுவன தனுஷ் தன் கண் பார்வையை இழந்து படு காயமுற்ற சம்பவம் என் மனதை உலுக்கி விட்டது. எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அச்சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பெற்றோருக்கும் ஆறுதல் கூறினேன். கண் பார்வை பாதிப்புக்குள்ளான அச்சிறுவனை பார்த்து வேதனை அடைந்தேன்.
இதுபோன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே இனி யாரும் தயவு செய்து பேச வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications