For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்நோக்கம்... ஸ்டாலின்

13 பேர் உயிரிழப்புக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: 13 பேர் உயிரிழப்புக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாயலத்தில் கூடியது. நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில் நாளை திமுக சார்பில் எழுப்பப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

Stalin says that there is a motive behind Sterlite shut down

இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி அளிக்கையில் 13 பேர் உயிரிழப்புக்கு பிறகு ஸ்டெர்லை் ஆலையை மூடும் அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையில் முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்கவில்லை.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவை அரசாணையாக வெளியிட்டுள்ளனர். பேரவை கூடுகிறது என்பதற்காக துணை முதல்வர் ஓபிஎஸ் தூத்துக்குடி சென்று திரும்பினார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆலை மூடப்பட்டு கண்துடைப்பு நடத்தப்பட்டது. 13 பேர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடருவோம். 13 பேர் கொல்லப்பட்டது குறித்து நாளைய பேரநவை கூட்டத்தில் எழுப்புவோம் என்றார் ஸ்டாலின்.

English summary
DMK Working President MK Stalin says there is a motive behind sterlite shut down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X