For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா... மு.க.ஸ்டாலின் நக்கல்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி திமுக மாநில மாநாட்டில் நேற்று பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

தனது பேச்சு முழுவதும் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.

மேலும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் ஜெயலலிதாவை அம்மா, அம்மா என்று புகழ்ந்து பேசியதையும் அவர் கிண்டல் செய்தார்.

மு.க.ஸ்டாலினின் பேச்சு முழு விவரம்...

மாண்புமிகு ஓ.பி.

மாண்புமிகு ஓ.பி.

இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தலைமையில் இருக்கக் கூடிய அதிமுக ஆட்சி நிதிநிலையை தாக்கல் செய்திருக்கிறது. நிதியமைச்சராக இருக்கக் கூடிய ஓ.பி. மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம், அவர் ஏறக்குறைய 80, 82 பக்க புத்தகத்தை முழுமையாக படித்தார்.

150 முறை அம்மா அம்மா அம்மா...

150 முறை அம்மா அம்மா அம்மா...

அந்த 80 பக்க புத்தகத்தில் குறைந்தது 150 முறை அம்மா அம்மா அம்மா அம்மா என்று படித்திருக்கிறார். எங்க அம்மாவை நாங்க அம்மா என்றுதான் கூப்பிடுவோம். இங்க இருக்கக் கூடிய நீங்கள் எல்லாம் உங்களுடைய அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுவீர்கள். ஆனால் அவர்கள் எல்லாம் இன்றைக்கு கூப்பிடுகிறார்கள் என்று சொன்னால் அம்மா என்பது அம்மா இல்ல சும்மா கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.

துவக்கத்திலேயே.. அதுதான் வேடிக்கை

துவக்கத்திலேயே.. அதுதான் வேடிக்கை

அந்த நிதிநிலை அறிக்கையின் புத்தகத்தில் துவக்கத்திலேயே குறிப்பிடுகிறார்கள் அதுதான் வேடிக்கை. அதில், 'நமது மாண்புமிகு முதல் அமைச்சர் அம்மா அவர்கள், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன், சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என்பதை இங்கு பெருமிதத்தோடு குறிப்பிட விரும்புகிறேன். நமது நாட்டில் எந்த மாநில வரலாற்றிலும், எக்கால கட்டத்திலும், எந்த முதல் அமைச்சரும் குறுகிய மூன்று ஆண்டு கால கட்டத்தில் இத்தனை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியதில்லை'. என்று நிதியமைச்சர் ஓ.பி. இந்த புத்தகத்தில் இருப்பதை படித்து காட்டியிருக்கிறார்.

அதைச் செய்வோம். இதைச் செய்வோம்.. வானத்தைக் கிழிப்போம்

எத்தனையோ உறுதிமொழிகள் வழங்கப்பட்டது. எத்தனையோ வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. இதே ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம். வானத்தை கிழிப்போம். வைகுண்டத்தை காட்டுவோம். மணலைக் கூட கயிறாக திரிப்போம் என்பது போல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

வெட்கமாக இல்லை..

வெட்கமாக இல்லை..

அதில் அவர் முக்கியமாக சொன்னது. அதிமுக மேடையில் அல்ல. அதிமுகவின் 2011 தேர்தல் அறிக்கையில் பக்கம் 7ல், 2012ம் ஆண்டிற்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை செய்வோம் என்று அறிவித்தார்கள். மூன்று ஆண்டு காலம் ஆளுகிற ஆட்சியை பார்த்து கேட்கிறேன். ஆயிரம் மெகாவாட் அல்ல. ஒரே ஒரு மெகாவாட் உற்பத்தி செய்தீர்களா. வெட்கமாக இல்லை.

ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்

ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முதலில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜெயலலிதாவால் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை புத்தகத்தை நிதியமைச்சர் எடுத்து படிக்கிறார். படிக்கிறபோது ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார், 2012 ஆகஸ்ட் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் மின்தட்டுப்பாடு நீக்கப்படும் என்று படிக்கிறார். இப்போது என்ன ஆண்டு 2014 பிப்ரவரி மாதம்.

வானத்தில் வேண்டுமானால்

வானத்தில் வேண்டுமானால்

அதன் பிறகு சட்டமன்றத்தில் 28.12.2012ல் ஜெயல-தா சொல்லுகிறார் வரும் ஜூன் மாதத்தில் இருந்து மின்வெட்டு பிரச்சனை குறையும். அதற்கு பிறகு ஜெயலலிதா 6 மாதத்திற்குள் முடியும் என்கிறார். மின்துறை அமைச்சராக இருக்கக் கூடிய மாண்புமிகு நத்தம் விஸ்வநாதன் பத்திரிகை ஒன்றில் பேட்டி அளிக்கும்போது விரையில் மின்வெட்டு பிரச்சனை தீரும். வானத்தில் வேண்டுமானாலும் மின்வெட்டு இருக்கலம். தமிழ்நாட்டு மண்ணில் மின்வெட்டு இருக்காது என்று சொன்னார்.

மன்னிக்கவும்.. படித்தார்

மன்னிக்கவும்.. படித்தார்

ஏற்காடு இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதா வந்தார். வந்த நேரத்தில் பேசினார். மன்னிக்கவும் பேசிடவில்லை படித்தார். அவர் படித்திடும்போது குறிப்பிட்டுச் சொன்னால் என்ன தெரியுமா. இந்த மின்வெட்டுக்கு காரணம் மத்திய அரசு. அத்தோடு நிறுத்தவில்லை.

ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் நினைவுதான்

ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் நினைவுதான்

இந்த மின்பற்றாக்குறைக்கு காரணம் கலைஞர். கலைஞரை என்றைக்கும் ஜெயலலிதா மறக்க மாட்டார். பகலிலும், இரவிலேயும் ஜெயலலிதாவுக்கு சதா கலைஞரோட நினைவுதான். எதற்கெடுத்தாலும் கலைஞர்தானா.

ஜெயலலிதாவைக் கேட்கிறேன்

ஜெயலலிதாவைக் கேட்கிறேன்

ஜெயலலிதாவை பார்த்து கேட்கிறேன். நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறதே அதற்கும் கலைஞர்தான் காரணமா. நீங்கள் அடிக்கடி கொடநாட்டில் போய் ஓய்வு எடுக்கிறீர்களே அதற்கும் கலைஞர்தான் காரணமா. திட்டம் எங்கே. வாக்குறுதி எங்கே. உறுதிமொழி எங்கே.

நாங்கள் மறுக்கவில்லையே...

நாங்கள் மறுக்கவில்லையே...

2006ல் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்கும்போது மின்வெட்டு இருந்தது. அதை நாங்கள் மறுக்கவில்லை. இரண்டு மணி நேரம் மின்வெட்டு. அந்த இரண்டு மணி நேரத்தையும் கலைஞர் எப்படி சரிகட்டினார். சரிகட்டியது மட்டுமல்ல. அந்த பற்றாக்குறையை நிரந்தரமாக போக்கிட வேண்டும்.

இருந்தாலும் இல்லாவிட்டாலும்

இருந்தாலும் இல்லாவிட்டாலும்

திமுக ஆட்சி வருகிறதோ. இல்லையோ. யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்கக் கூடாது என்கிற நிலையில் 2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர், மின்உற்பத்திக்கான எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி தந்தார். திமுக ஆட்சியில் கலைஞர் முன் நின்று முயற்சி எடுத்த காரணத்தினால், 7,798 மெகாவாட் 20,624 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

ஜெயலலிதா துரிதமாக செயல்பட்டிருந்தால்

ஜெயலலிதா துரிதமாக செயல்பட்டிருந்தால்

இந்த திட்டங்கள் தொடர ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு துரிதமாக ஈடுபட்டிருந்தால், நான் உறுதியாக சொல்லுகிறேன், இன்று தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பிரச்சனையே இல்லாமல் போயிருக்கும்.

சீனி சர்க்கரை சித்தப்பா.. ஏட்டில் எழுதி நக்கப்பா

சீனி சர்க்கரை சித்தப்பா.. ஏட்டில் எழுதி நக்கப்பா

அமைச்சர் உறுதிமொழி தருகிறார். முதல்வர் உறுதிமொழி தருகிறார். அமைச்சர், முதல்வர் பேட்டி தருகிறார். சட்டமன்றத்தில் பேசுகிறார்கள். எங்கே மின்சாரம். ஒரு பழமொழி சொல்லுவார்கள். சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்பதுபோல இன்றைக்கு அதிமுக ஆட்சியின் உறுதிமொழிகளும், வாக்குறுதிகளும் அமைந்திருக்கிறதே தவிர வேறு எதுவும் இல்லை.

விலை போகாத அரிசி

விலை போகாத அரிசி

கலைஞர் ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு, பின்னர் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுக்கப்பட்டு, பின்னர் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா விலையில்லா அரிசி தருவதாக சொன்னார். விலையில்லா அரிசியா அது. விலை போகாத அரிசி.

திடீரென ஒரு அறிவிப்பு

திடீரென ஒரு அறிவிப்பு

திடீரென ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 20 ரூபாய்க்கு மலிவு விலையில் தரமான அரிசி தருவேன் என்று சொன்னார். ஏற்கனவே விலையில்லா அரிசியை தருகிறேன் என்று சொன்னால் அது தரமில்லாத அரிசி என்பதை ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டுக்கிறார் என்பதுதானே உண்மை. 2013ல் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டம் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா.

விரைவில் தீர்ப்பு வரப் போகிறது

விரைவில் தீர்ப்பு வரப் போகிறது

திமுக ஆட்சியில் மத்திய அரசின் ஒத்துழைப்போடு ரூபாய் 1200 கோடியில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் சாலை திட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. அந்த திட்டத்தை ஒப்பந்தம் எடுத்தவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். விரைவில் அதற்கான தீர்ப்பு வரப்போகிறது.

வெட்கமாக இல்லை

வெட்கமாக இல்லை

நெடுஞ்சாலைகள் துறை மூலமாக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம்.அதுவும் அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தோல்வி அடைந்துள்ள மோனோ ரயில் திட்டம், அந்த திட்டத்தை மூன்று ஆண்டு காலமாக ஜெயலலிதா அறிவித்துக்கொண்டு இருக்கிறாரே தவிர, நிதிநிலை அறிக்கையில் வந்திருக்கிறதே தவிர, அந்த திட்டம் குறித்து இந்த ஆட்சியில் ஒரு ஆய்வு பணியாவது நடந்திருக்கிறதா. வெட்கமாக இல்லை.

இதை விட பெரிய கொடுமை

இதை விட பெரிய கொடுமை

சுத்தமான, பாதுகாப்பட்ட குடிநீரை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 20 லிட்டர் மக்களுக்கு வழங்குவேன் என்று 2011ல் ஜெயலலிதா சொன்னார். இதைவிட பெரிய கொடுமை, இதுவரையில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஒரு அரசாங்கம் குடிக்கக் கூடிய தண்ணீரை விற்கக் கூடிய கேவலம் எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா செய்கிறார். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்றார் ஸ்டாலின்.

English summary
DMK treasurer M K Stalin slammed cm Jayalalitha and ADMK govt in Trichy state conference yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X