டெங்கு காய்ச்சல் விவகாரம்: ஸ்டாலின் தப்பு தப்பாக சொல்கிறார்.. செல்லூர் ராஜு விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் ஸ்டாலின் தவறான கருத்துக்களை கூறுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

அப்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தை வாட்டிவதைத்து வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

Stalin telling in wrong information about Dengue fever: Sellur Raju

டெங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என அவர் கூறினார். டெங்கு விவகாரத்தில் அரசை குறை கூறுவதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் தவறான கருத்துக்களை கூறுவதாக தெரிவித்த அவர் தமிழகத்தில் டெங்குவால் அசாதாரண சூழ்நிலை இல்லை என்றார். டெங்கு காய்ச்சலை ஒழிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் மற்றும் ரத்தப்பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மேலும் மதுரையில் 3,500 அரசு ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெங்குவை ஒழிக்க வேண்டுமானால் கொசுவை ஒழிக்க வேண்டும் என்ற அவர் அதற்கு ஊடகங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister sellur Raju said that Stalin telling in wrong information about Dengue fever. He said there is no extraordinary situation in Tamilnadu due to dengue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற