For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலினை அழைத்து செல்ல விடாமல் போலீஸை ஸ்தம்பிக்க வைத்த திமுகவினர் கைது

ஸ்டாலினை அழைத்து செல்ல விடாமல் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸார் ஸ்தம்பித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது- வீடியோ

    சென்னை: தலைமை செயலகத்தில் மறியல் செய்த ஸ்டாலினை அழைத்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதை வலியுறுத்தி தலைமை செயலகத்தில் முதல்வர் அறை முன்பு ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-who-inside-police-van-cannot-be-move-because-dmk-protest-320650.html

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வெளியே திமுக தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்டோரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Stalin who inside police van cannot be move because of DMK protest

    இதையடுத்து ஸ்டாலினை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸார் அவரை வேனில் ஏற்றினர். அவருடன் இருந்த திமுக மூத்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

    தலைமை செயலகம் முன்பு பல்லாயிரக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளதால் ராஜாஜி சாலையே ஸ்தம்பித்துள்ளது. அவரது வாகனத்தை நகர விடாமல் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

    Stalin who inside police van cannot be move because of DMK protest

    திமுகவினர் ஆயிரக்கணக்கில் திரண்டு மறித்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவியது. ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டு திமுகவினர் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து வேனை வழிமறித்த திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். எஞ்சிய திமுகவினர் ராயபுரம் சமூக நலக் கூடத்துக்கு அழைத்து செல்லப்படும் ஸ்டாலின் வாகனத்துடன் சென்றனர்.

    English summary
    The police van where MK Stalin was arrested could not be moved forward as the DMK cadres not gives path to move.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X