For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரும் கல்வியாண்டிலேயே அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி தொடங்க வேண்டும்: சரத்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.

Start Kinder Garden classes in government schools : Sarathkumar

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

ஒரு காலத்தில் பள்ளிப்படிப்பு 5 வயது பூர்த்தியானதில் இருந்து தொடங்கியது. பின்னர் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கியதிலிருந்து 3 வயது பூர்த்தி ஆனதில் இருந்தே பள்ளிப்படிப்பு தொடங்கி விட்டது.

இன்னும் ஒரு படி மேலாக 3 ஆம் வயது ஆரம்பத்திலேயே பிரி.கே.ஜி. என்ற வகுப்பில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். பட்டப்படிப்பு, மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம் என்று கல்வி கற்கும் போது ஏறக்குறைய 20 வருடங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்க நேரிடுகிறது.

பெற்றோர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கணிசமான கட்டணம் வசூலித்து வருகின்றன. பிரி.கே.ஜி. முதலே பள்ளிப்படிப்பு ஆரம்பம் என்பது நடைமுறையாகி விட்டது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் கல்வி ஆண்டு முதல் ஆரம்ப பள்ளிக்கல்வியில் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளைத்தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Samathuva makkal katchi president Sarathkumar has demanded the government to start kinder garden classes in government schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X