For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடனில் தமிழகம் தத்தளிக்கும்போது ஸ்கூட்டி எப்படி தர முடியும்? ஸ்டாலின் சரமாரி கேள்வி

கடனில் தமிழகம் தத்தளிக்கும்போது எப்படி ஸ்கூட்டி தரமுடியும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் கடனில் தத்தளிக்கும் போது எப்படி ஸ்கூட்டி வழங்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபையில் திமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற்றது. திருச்சியில் உண்ணாவிரதத்தை முடித்த ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டரகளிடையே உரையாற்றினார்.

state government has Rs.5 lakh crore debt : Stalin

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட மதுக்கடைகள் மூடல் மற்றும் ஸ்கூட்டிக்கு மானியம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விமர்சித்தார். தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

கடனில் தத்தளிக்கும் அரசு எப்படி ஸ்கூட்டி வழங்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஏற்கனவே மூடப்பட்ட 500 மதுக்கடைகளின் பட்டியலை வெளியிட தயாரா என்றும் ஸ்டாலின் தமிழக அரசுக்கு சவால் விட்டார்.

பொய்யை வைத்து பிழைப்பு நடத்தும் பினாமி ஆட்சியை அகற்ற தயாராவோம் என்றும் ஸ்டாலின் தனது உரையின் போது கோரிக்கைவிடுத்தார்.

English summary
DMK working president the state government has Rs.5 lakh crore debt. when the government is in dept how the government can we provide scooty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X