For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்குமார் மரணத்தில் சந்தேகங்கள்… மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலையில் பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளதால், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து ராம்குமார் மரண வழக்கை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

State Human Rights Commission to suo motu take up Ramkumar suicide case

புழல் சிறையில் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரென நேற்று மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மரணத்தின் மீது பல்வேறு சந்தேகங்களையும் ஐயங்களையும் அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், ராம்குமார் மரண வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக கொண்டு ராம்குமார் மரண வழக்கை தாமாக முன்வந்து ஆணையம் விசாரிக்கிறது. மேலும், ராம்குமார் மரண வழக்கை விசாரித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Ramkumar suicide case will be taken as a suo motu case by State Human Rights Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X