For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விஞ்ஞானிகள் மாநாடா - “கும்பமேளாவா?” : கி.வீரமணி கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: விஞ்ஞானிகள் மாநாடு என்ற பெயரில் புராணக் கற்பனைகளுக்கு அறிவியல் முலாம் பூசுவது தடுக்கப்பட வேண்டும். விஞ்ஞானிகளும், வரலாற்று ஆசிரியர்களும் இவற்றைத் தடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் (மிஸீபீவீணீஸீ ஷிநீவீமீஸீநீமீ சிஷீஸீரீக்ஷீமீss) தான் கலந்து கொள்ளப் போவதில்லை; காரணம் ஒரு சர்க்கஸ்போல் அண்மைக்காலத்தில் நடைபெறுகிறது. அதில் அறிவியலைப் பற்றி விவாதிக்கப்படுவது மிக மிகச் சொற்பமாகவே உள்ளது" என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் பளிச்சென தெரிவித்துள்ளார்.

statement issued by k.veeramani

அறிவியல் மாநாடா கும்பமேளாவா?

பி.எம். பிர்லா சயின்ஸ் சென்டரின் இயக்குநரான பி.ஜி. சித்தார்த் என்பவர், "அது (மாநாடு) அறிவியலாளர்கள் கூடும் ‘கும்பமேளா' - எல்லா முக்கியத்துவமும் பிரதமர் வருகை பற்றியதாகவே இருக்கும்.

இதற்குச் செலவாகும் பல கோடி ரூபாய்களைக் கொண்டு ஒரு மருத்துவக் கல்லூரி கட்டினால் அது பயனுள்ளதாக இருக்கும்.இந்த சயின்ஸ் காங்கிரஸ் மாநாட்டில் பழையவர்கள், தங்களுக்கு வேண்டிய சிலரது முதுகை தட்டுவதும், அவர்கள் அதற்குக் கைமாறு போல இவர்களைப் (பாராட்டிடுவது) முதுகைத் தட்டுவதுமாக வாடிக்கையான வேடிக்கைதான் அங்கு நிகழ்கிறது" என்று கூறியுள்ளார்.

பிரபல இயற்பியல் துறை மூத்த விஞ்ஞானியான பி.எம். பார்கவா கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாகவே இதன் தரம் மிகவும் தாழ்ந்தே வருகிறது; இப்போது இப்படி ஒரு நிகழ்வை நடத்த தண்டச் செலவே தவிர, வேறு இல்லை" இப்படி இந்திய விஞ்ஞானிகள் வெந்து, நொந்து நூலாகிய நிலையில் கருத்துக்கள் பகிரங்கமாகவே வந்ததற்கு யார் காரணம்? எது காரணம்? ஆராய்வது ஒவ்வொரு (வரி செலுத்தும்) குடி மகனுடைய கடமையோகும்!

கடந்த ஆண்டு நடந்த கூத்து

கடந்த ஆண்டில் விஞ்ஞானிகள் மாநாட்டை புராண இதிகாசப் பெருமை பேசும் மாநாடாக மிக மிக மலிவான வகையில் ஆனதற்கு பிரதமரும், வேறு சில காவி உணர்வாளர்களானவர்களும் தான் காரணம்!

இன்று வந்துள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது!

வேத காலத்திலேயே விமானம் பறந்துள்ளது; சூரிய வெப்பத்தைக் கொண்டே அது இயங்கி இருக்கக் கூடும் என்று அபத்தமான ஒன்றை ஆராய்ச்சி என்று நிறுவும் (ஆர்.எஸ்.எஸ்.) முயற்சியில் ஈடுபட்டார்; உலக விஞ்ஞானிகள் மவுனத்தால் நம்மை - நம் மாநாட்டை "சபித்தனர்!"

பிரதமரின் அபத்தம்!

துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதோ அந்த வகை அபத்தத்திற்கு மேலும் மகுடம் சூட்டிய அசல் கேலிக் கூத்தாகவே அமைந்தது!

"பிளாஸ்டிக் சர்ஜரியை புராணக் காலத்திலேயே பெற்றிருந்த பெருமைக்குரியது நம் நாடு, சிவபெருமான் பிள்ளையார் தலையை வெட்டிய பிறகு யானைத் தலையை ஒட்ட வைத்தது எவ்வளவு பெரிய விஞ்ஞான முன்னோடிச் சாதனை" என்று பேசினார், இவரைத் திருப்தி செய்யவே முன் கூறிய வேத காலத்திலேயே விமானம் ஓடியது என்று ‘புருடா' விட்டதை ஆராய்ச்சிக் கட்டுரை போல படித்து நாம் சர்வதேச அவமானத்தைத் தேடிக் கொண்டோம்.

அது மட்டுமல்ல; இவ்வாண்டு காங்கிரசு மாநாடும் - அதிலிருந்து அப்போக்கு நோக்கிலிருந்து வழுவவில்லை என்று உறுதி செய்து அறிவிப்பதுபோல இன்று வந்துள்ள ஒரு செய்தி;

சிவன்தான் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்னோடியாம்!

சிவன்தான் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்னோடித் திட்டம் வகுத்தவர் என்று ஒரு (காவி) ஆராய்ச்சியாளர், ஆய்வுக் கட்டுரை படிக்கவிருக்கிறாராம்!

பரவாயில்லை. செத்துப்போன சேங்காலிபுரம் அனந்தராம தீட்சதரும், இன்று புராணப் பிரசங்கம் கூறும் வேளுக்குடி கிருஷ்ண அய்யங்கார்களும்கூட இந்த இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு, ‘கிருஷ்ண பகவான்தான் சேலை தயாரிக்கும் தொழிற்சாலைக்கே முன்னோடி என்பது துரவுபதை துயிலுரியப்பட்டபோது துரவுபதைக்கு சேலை தொடரும்படி செய்த முன்னோட்ட விஞ்ஞானி' என்றுகூட ஆய்வுக் கட்டுரைகள் படிக்கலாம்; இவர்களை அதிமேதாவிலாசங்கள் என்று கூடப் பாராட்டலாம்; இந்த அரிய வாய்ப்பும் எங்கே கிடைக்கப் போகிறது? - இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டைத் தவிர!

புத்தரின் சாரநாத் பற்றிய கால மோசடி!

நவீன கல்வெட்டு ஆய்வு என்ற பெயரால் புத்தரின் சாரநாத் (காசி - வாரணாசி) அருகில் உள்ள சின்னம்) அது கி.மு. அல்லது கி.பி. 2ஆம் நூற்றாண்டு, 4ஆம் நூற்றாண்டு என்று ஒரு ‘புது (ஆராய்ச்சி)க் கரடி' தகவல்களை நேற்று செய்தியாக வெளி வந்துள்ளது!
கல்வியைக் காவிமயமாக்குவதோடு, புராணங்களையும், இதிகாசங்களையும், வரலாறுகளாகவும், விஞ்ஞான முன்னோடிகளாகவும் சித்தரித்து, நாட்டையே பாழ்படுத்த மத்தியில் ஆட்சி செய்வோர் ஈடுபடுவது வருந்தத்தக்கது, வேதைனக்குரியது மட்டுமல்ல, வன்மையாகக் கண்டனத்திற்கும்கூட உரியது!

விஞ்ஞானிகள் - அறிவாளிகள் தடுத்து நிறுத்த வேண்டும்

முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் மொகஞ்சதாரோ நாகரிகம் என்பதில் காளை மாட்டை, குதிரையாக (ஆரியக் கலாச்சார நுழைவுச் சின்னமாக) மாற்றிக் காட்ட அமெரிக்காவிலேயே சிலரைப் பிடித்து முயற்சித்தது அம்பலமானபோது அப்படியே அது கிடப்பிற்குச் சென்றது.

விஞ்ஞானிகளும், அறிவியல் சிந்தனையாளர்களும் வரலாற்றுப் பெரு மக்களும் பேராசிரியர்களும், கணித மேதைகளும் (அங்கு வேத காலக் கணிதம்) ஊடுருவிவாமல் எச்சரிக்கையுடன் தடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

English summary
Dravidar Kazhagam president K. Veeramani released a statement about Indian Science Congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X