For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. தமிழக அரசு கொள்கை முடிவு.. சென்னை ஹைகோர்ட்டில் தகவல்

தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தாமாக முன்வந்து சிபிஐ விசாரணை கோரும் தமிழக அரசு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.

    தமிழக அரசு சிலை கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதை அடுத்து தற்போது தமிழக அரசு தானாக முன்வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    Statue Smuggling case: TN government decides to give up, will send the case to CBI

    தற்போது தமிழகத்தில் சிலை கடத்தல் பிரச்சனை உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பழனியில் கோவிலில் மாற்றப்பட்ட சிலை தொடங்கி தமிழகம் முழுக்க முறைகேடாக திருடப்பட்ட சிலை வழக்கில் விசாரணை நடக்கிறது.

    ஆனால் தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதில் தமிழக அரசின் நடவடிக்கையை சென்னை ஹைகோர்ட் கண்டித்து இருந்தது. மேலும் தமிழக அரசு சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.

    இந்தநிலையில் இன்று சென்னை ஹைகோர்ட்டில், தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.

    ஹைகோர்ட் விசாரணையில் தமிழக போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்று தமிழக அரசே சென்னை ஹைகோர்ட்டில் கூறியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை முறைப்படி சிபிஐக்கு விரைவில் மாற்றப்படும்.

    English summary
    Statue Smuggling case: Tamilnadu government decides to give up, will send the case to CBI. After Chennai HC condemns TN's slow action on Statue Smuggling case. Statue Smuggling case becomes the most important case of this month due to continuing smuggling activity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X