For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க எதிர்ப்பு.. போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து இரும்பாலை ஊழியர்கலள் தங்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

சேலம்: சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து இரும்பாலை ஊழியர்கள் தங்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடரபோவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களில் தொடர் போராட்டத்தால் இரும்பாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் இரும்பாலை உள்ளிட்ட நாட்டில் உள்ள 22 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த முடிவை ரத்து செய்ய வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்களும் போரட்டம் நடத்தி வந்தனர்.

Steel plant workers plan protests against central goverment

இந்நிலையில் இரும்பாலை ஊழியர்கள் தங்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பல போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். மத்திய அரசு சேலம் இரும்பாலையை தனியார் மையமாக்கும் முடிவை ரத்து செய்யவில்லை என்றால் தங்களின் போராட்டம் தொடரும் என இரும்பாலை ஊழியர்களின் எச்சரிக்கை விடுத்தனர்.

இரும்பாலை ஊழியர்களின் தொடர் போராட்டத்தினால் சேலம் இரும்பாலையில் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
salem Steel plant workers protests against central goverment for trying to convert steel plant as a public sector into private sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X