For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளுக்கும் பருவமழை: வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட சென்னை மாநகராட்சி!

பருவமழை வெளுக்க தொடங்கியுள்ளதை முன்னிட்டு வெள்ளப் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வானிலை ஆய்வு மையம் வார்னிங்! -வீடியோ

    சென்னை: பருவமழை வெளுக்க தொடங்கியுள்ளதை முன்னிட்டு வெள்ளப் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

    Steps have been taken to tackle flood: Chennai City Corporation Commissioner Karthikeyan

    அப்போது சென்னையில் 300 இடங்கள் தாழ்வானப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சென்னையில் தேங்கும் மழை நீர் 450 மின் மோட்டார்கள் மூலம் அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    சென்னையில் மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 175 தங்கும் மையங்களில் சமையல் பொருட்கள் தயராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    English summary
    Chennai City Corporation Commissioner Karthikeyan said steps have been taken to prevent flood. He said 300 places in Chennai were declared low-lying areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X