For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட்: மக்கள் அதிகாரம் மீதான வழக்குகள் ரத்து.. மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்ட 6 வழக்குகளை மதுரை ஹைகோர்ட் பென்ச் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்ட 6 வழக்குகளை மதுரை ஹைகோர்ட் பென்ச் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.இந்த செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.

Sterlite Case: Madurai HC bench cancells case against Makkal Adhigaram Members

எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. அதே சமயம் இதில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து வழக்கு விசாரணை மதுரை ஹைகோர்ட் பென்ச்சில் நடந்து வருகிறது.

அதில் மிக முக்கியமான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அனைத்து விசாரணையும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதே சமயம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்ட 6 வழக்குகளை மதுரை ஹைகோர்ட் பென்ச் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த வழக்குகள் தேவையில்லாமல் போடப்பட்டுள்ளது என்று ஹைகோர்ட் கூறியுள்ளது.

உடனடியாக 6 வழக்குகளையும் நீக்க வேண்டும் என்று போலிஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு, அரசுக்கு இந்த விஷயத்தில் ஹைகோர்ட் கண்டிப்பு காட்டியுள்ளது.

English summary
Sterlite Case: Madurai HC bench cancells 6 cases against Makkal Adhigaram Members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X