For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அமில கசிவு.. 2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்.. அதிகாரிகள் திணறல்

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்..அதிகாரிகள் திணறல்- வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். அங்கு பணிக்கு இருந்த காவலர், இதனால் மயங்கி விழுந்துள்ளார்.பழைய குழாயில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது.

    Sterlite Copper Acid leakage: Couldnt get over the wastes, Cleaning continuous for 2nd day

    இப்புகாரின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று முதல்நாள் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

    இதை அப்புறப்படுத்தப்படும் பணி நேற்று தொடங்கியது. இதில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். மீண்டும் கசிவு ஏற்படாத வண்ணம் சரிசெய்யப்பட்டு வந்தது.

    ஆனால் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். நேற்று காலையில் இருந்து தீயணைப்பு படையினர், அதிகாரிகள் கழிவு நீக்கி வருகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையாக நீக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    காப்பர் கழிவுகளை அகற்ற முடியாமல் திணறி வருகிறார்கள் திணறி வருகிறார்கள். கழிவுகளை அகற்ற டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது.

    இன்றும் இரண்டாவது நாளாக கழிவு நீக்கம் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆலை கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

    English summary
    Sterlite Copper Acid leakage: A special team cleaning the wastages from the factory.Cleaning of the wastages continuous for 2nd day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X