For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் தடை.. வழக்கு தொடுக்கும் எண்ணத்தில் வேதாந்தா.. தமிழக அரசு கேவியட் மனு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் தடை...தமிழக அரசு கேவியட் மனு- வீடியோ

    சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. இதுமக்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை உண்டாக்கியுள்ளது.

    Sterlite issue: Tamilnadu govt files caveat petition anticipating Vedantas case against the ban

    கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி, 13 பேரின் உயிரை இழந்து அவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளனர். ஆனாலும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவது இன்னும் உறுதியாகவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது.

    மேலும் அரசாணையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அரசாணை போதிய அளவில் வலுவாகவும் இல்லை. இதனால் ஸ்டெர்லைட் நிறுவனம் கண்டிப்பாக வழக்கு தொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்கள் அரசாணை குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கேவியட் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    English summary
    Sterlite issue: Tamilnadu govt files caveat petition anticipating Vedanta's case against the ban.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X