For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினி திடீர் கோபம்.. மிருகத்தனம் என கண்டனம்!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து ரஜினி வெளியிட்ட வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயலை கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.

    மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Sterlite masscare: Rajinikanth condemns Police inhuman attack in Tuticorin

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறையின் தோல்வி, காவல்துறையின் வரம்பு மீறிய சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், என்றுள்ளார்.

    இன்னொரு டிவிட்டில் ''மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு.'' என்றுள்ளார்.

    முன்னதாக தூத்துக்குடி போராட்டம் குறித்து தனது ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார் ரஜினி. அவரது யாருக்கும் வலிக்காத வகையிலான கருத்தால் பெரும் அதிருப்தி வெடித்தது. ஒட்டுமொத்த தமிழகமும் தூத்துக்குடியில் போலீஸார் செயல்பட்ட விதத்தால் கொந்தளித்து கொதித்துப் போயுள்ளதை தற்போது உணர்ந்து இப்போது மிருகத்தனம் என்று கடுமையான வார்த்தைகளை ரஜினி பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

    English summary
    Sterlite masscare: Rajinikanth condemns Police inhuman attack in Tuticorin. He releases Video on Tuticorin police attack condemning, TN Gov and Police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X